வாடகை நிலுவை தொகையை செலுத்தாததால் கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்.

Loading

ஊத்தங்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட கடைகளுக்கான வாடகை நிலுவை தொகையை செலுத்தாததால் கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சிக்கு சொந்தமான கடைகள் கிருஷ்ணகிரி மெயின் ரோடு மற்றும் பேரூராட்சி அலுவலக சாலையில் உள்ளது. இந்த கடைகளில் சில வாடகைதாரர்கள் வாடகை செலுத்தாமல் நீண்ட நாள் வாடகை பாக்கி வைத்துள்ளனர். ஒன்பது கடைகளுக்கு மட்டும் வாடகை நிலுவையாக 20 லட்ச ரூபாய்க்கு மேல் உள்ளது பலமுறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியும் நேரில் கேட்டும் வாடகை செலுத்தாமல் நீண்ட நாள் நிலுவையில் வைத்துள்ளனர். இந்த நிலையில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கைகளை பேரூராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர். பேரூராட்சி செயல் அலுவலர் சேம் கிங்ஸ்டன் உதவியாளர் சேகர் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைத்தனர் ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
0Shares

Leave a Reply