திமுக அரசை கண்டித்து பாஜகவினர் தெருமுனை பிரச்சாரம்

Loading

மதுரை மாநகர் பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஆரப்பாளையம் மண்டல் செயற்குழு கூட்டம் மற்றும் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க தெருமுனை கூட்டம் ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் மண்டல் தலைவர் பால்பாண்டி தலைமையிலும், மாநகர் மாவட்ட தலைவர் தாமரை சேவகன் மகா சுசீந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது, திமுக அரசின் அவலநிலை குறித்தும், எழுதாத பேனாவிற்க்கு சிலை வைப்பதை கண்டித்தும், பட்ஜெட் குறித்தும் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர் கீரைத்துரை குமார், மாவட்ட பொதுச் செயலாளர்கள் துறை பாலமுருகன், வினோத் குமார், பொருளாளர் ராஜ் குமார், மருத்துவ பிரிவு மாவட்டத் தலைவர் முரளி பாஸ்கரன், ஐ டி விங்க் மாநில செயலாளர் விஸ்வநாத் மற்றும் ஆரப்பாளையம் மண்டல் நிர்வாகிகள், தாமரை சேவகர்கள் குழுவினர்கள், மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply