தபால் வாக்குகளை பதிவு செய்த காவலர்கள்

Loading

திருவள்ளூர் தொகுதியில் தபால் வாக்குகளை பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றும் காவலர்கள் :

திருவள்ளூர் ஏப் 18 : திருவள்ளூர் மாவட்டத்தில் வருகிற 23-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவுறுத்தலின் பேரில் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக 100 சதவிகிதம் வாக்குப் பதிவு நடைபெற வேண்டும் என்பதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் இன்றும் 17-ஆம் தேதியும் வருகிற 20 ஆம் தேதியும் என 2 நாட்கள் தபால் ஓட்டு செலுத்த அந்தந்த  சட்டமன்ற தொகுதிகளில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் பேரில் தபால் வாக்கு செலுத்த  படிவம்-12 டி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால்  வழங்கப்பட்டது.
இந்நிலையில் திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள காவல் துறையில் பணிபுரியும் காவலர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து திருவள்ளூர்  மாவட்டத்தில் தேர்தல்  பணியில் ஈடுபடும் மொத்தம் 1034 காவலர்கள் தங்களது தபால் வாக்குகளை பதிவு  செய்து வருகின்றனர். இன்று வாக்குப் பதிவு செய்ய இயலாதவர்கள் வருகிற 20-ஆம் தேதி வாக்குப் பதிவு செய்யலாம் என தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார்.
0Shares