ஆடி மாதம் வரையில் கொடை விழாக்கள் எனப்படும் ஆண்டு திருவிழாக்கள் நடைபெறும்.
தென்காசி மாவட்டத்தில் அனைத்து கிராம தெய்வங்களின் கோவில்களிலும் தை மாதம் தொடங்கி ஆடி மாதம் வரையில் கொடை விழாக்கள் எனப்படும் ஆண்டு திருவிழாக்கள் நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் வடகரை அருள்தரும் அம்பிகை ஸ்ரீ முப்புடாதி அம்மன் திருக்கோவில் கொடை விழா தை முதல் செவ்வாய் அன்று தொடங்கியது. ஒவ்வொரு வாரம் செவ்வாய் கிழமையும் ஒரு சமுதாயத்தினர் என 13 வாரங்கள் அதாவது பங்குனி உத்திரம் வரை கொடை விழா நடைபெறும். ஒவ்வொரு சமுதாயத்தினரும் ஆண்டுதோறும் தங்களது மண்டகப்படியை சிறப்பாக நடத்தி வருகின்றனர். தை மாத நான்காம் செவ்வாய் கிழமை அகமுடையர் சமுதாய மண்டகப்படி நடைபெற்றது. மதியம் முப்புடாதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மாலை 6 மணியளவில் அனுமா நதியிலிருந்து தீர்த்தக் கரகத்தை கோவில் அர்ச்சகர் சொ.முப்புடாதி பிள்ளை சுமந்து வர மண்டகப்படிதாரர்களான அகமுடையர் சமுதாயத்தினர் ரத வீதிகளில் அழைத்து வந்தனர். இரவு முப்புடாதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்ளும் தீர்த்தக்கரக அபிஷேகமும் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் முப்புடாதி அம்மனை மண்டகப்படி தாரர்களும் பொதுமக்களும் தரிசனம் செய்தனர்.