ஆதார் எண் இணைப்பதற்கான சிறப்பு முகாம் 04.02.2023 அன்று நடைபெறவுள்ளது

Loading

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பதற்கான சிறப்பு முகாம் 04.02.2023 அன்று நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர்  .த.மோகன்  தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை தலைமைத் தேர்தல் அலுவலர் மற்றும் முதன்மை அரசு செயலாளர் அவர்களால் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் தொடர்பான விவரங்களை உறுதி செய்வதற்காகவும் ஒரே வாக்காளரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதியில் (அல்லது) ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளதை கண்டறிவதற்கும் தன் விருப்ப அடிப்படையில் ஆதார் எண்; பெற்று வாக்காளர் அடையாள அட்டையுடன் பதிவுகள் மேற்கொள்ளவும் உத்திரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 01.08.2022 முதல் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணினை இணைத்திடும் பணி நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 04.02.2023 (சனிக்கிழமை) அன்று காலை 09.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மேற்படி சிறப்பு முகாமில் சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் படிவம் -6டீ  பெற்று ஆதார் எண் அல்லது ஆதார் எண் இல்லையெனில் படிவத்தில்; குறிப்பிட்டுள்ள இதர 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலினை இணைத்து  வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணினை வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையுடன் இணைத்துக்கொள்ளலாம். இவ்வாய்ப்பினை வாக்காளர்கள் தவறாது பயன்படுத்தி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் தெரிவித்துள்ளார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *