இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் குறை கேட்டு நடை பயண பிரச்சாரம்.
![]()
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் குறை கேட்டு நடை பயண பிரச்சாரம்.புதுச்சேரி அரசேமக்கள் நலத்திட்டங்களை அமலாக்கு.காமராஜர் நகர் தொகுதி முழுவதும் அனைத்து பகுதிகளிலும் சாலை. வாய்க்கால். சுத்தமான குடிநீர் வசதி செய்து கொடு.சாமி பிள்ளை தோட்டம் லெனின் நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து செயல்படுத்து.
சாரம் எஸ். ஆர் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்திடு.இக் கோரிக்கைகளை வலியுறுத்தி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி காமராஜர் நகர் தொகுதி குழு சார்பில் மக்கள் சந்திப்பு நடைபயணம் பிரச்சாரம்.
10 மணி அளவில் சாரத்தில் உள்ள தோழர் ஜீவா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துவிட்டு துவங்கப்பட்டது. இந்த பிரச்சார பயணத்தை முன்னாள் அமைச்சர் தோழர் R.விசுவநாதன் துவக்கி வைத்து பேசினார்.

