மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்து இலவச பயிற்சி கையேடுகளை வழங்கினார் :
![]()
திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் பல்வேறு அரசு பணியாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்து மாணவ மாணவியர்களுக்கு இலவச பயிற்சி கையேடுகளை வழங்கி பேசினார்.இன்றைக்கு SSC – MTS தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் துவக்குகிறோம். டி.என்.பி.எஸ்.சி. மற்றும் யு.பி.எஸ்.சி. தேர்வாக இருந்தாலும் சரி அதில் வெற்றி பெற ஒரு வழிமுறை உள்ளது. பாடத்திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். இப்பொழுதிலிருந்து தேர்வு வரை எத்தனை நாட்கள் உள்ளது என்பதை அறிந்து திட்டமிட்டு படிக்க வேண்டும்.இந்த பயிற்சி வகுப்பை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எனவே, அனைத்து போட்டித் தேர்வுகளிலும் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும்.இதுநாள் வரையில் அரசுப் பணிக்கான 2,50,025 நபர்கள் பதிவு செய்துள்ளனர். அதில் 1,26,711 பெண்களும், 1,23,314 ஆண்களும் பதிவு செய்;துள்ளனர். இவ்வலுவலகத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மத்திய, மாநில அரசு போட்டித் தேர்வுகளை அனைவரும் எதிர்கொள்ளும் வகையில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.தமிழ்நாடு வேலைவாய்ப்பு இணையதளத்தில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கென virtual learning portal உருவாக்கப்பட்டு போட்டி தேர்வுகளுக்கான அனைத்துப் பாடக்குறிப்புகள் பாடவாரியாகவும், தேர்வு வாரியாகவும் உட்செலுத்தப்பட்டுள்ளது. இதுநாள் வரையில் இத்தளத்தில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8056 நபர்கள் பதிவு பயனடைந்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த கல்லூரிகள் ஐடிஐ டிப்ளமோ கல்லூரிகளில் பயின்று வரும் 4000-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, அதில் 500-க்கும் மேற்பட்டோர் இத்தேர்வுக்கென பதிவு செய்துள்ளவர்களுக்கு 22.12.2022 அன்று தொடங்கப்பட்டு தற்போது 115 மாணவர்கள் இலவச பயிற்சி வகுப்புகள் பயின்று வருகின்றனர். தற்போது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள SSC – MTS மற்றும் ஹவில்தார் ஆகிய 12,523 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு பெறப்பட்டதைத் தொடர்ந்து இப்பயிற்சி வகுப்புக்கு கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி, வயதுவரம்பு 18 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இவ்வகுப்பு திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரை நடத்தப்படவுள்ளது என்று கூறினார்.இதில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி),மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் செ.ஆ.ரிஷப்,துணை ஆட்சியர் (பயிற்சி) சுபலட்சுமி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் க.விஜயா, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் மா.குமார், பயிற்றுநர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

