நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 63 வது பழக்கண்காட்சி.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 63 வது பழக்கண்காட்சி வருகிற மே மாதம் நடைபெறுவதை முன்னிட்டு, மலர்செடிகள் நடவு செய்யும் பணியினை தோட்டகலை துறை இணை இயக்குநர் (பொ)அவர்களால் துவக்கி வைக்கப்ட்டது.முதற்கட்டமாக சால்வியா, மற்றும் டேலியா, செடிகள் சிம்ஸ்பூங்காவில் நடவுசெய்யப்பட்டுள்ளது.இவ்வாண்டு பழக்கண்காட்சிக்காகஇரண்டு இலட்சத்து எண்பத்து நான்காயிரம் மலர் நாற்றுக்கள், பூங்காவின் பல்வேறு பகுதிகளில் நடவு செய்ய எற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதில் சால்வியா, ஆன்ட்ரினம், பால்சம் ,பெகோனியா, மேரிகோல்டு ,பிரன்ச்,மேரிகோல்டு,பேன்சி,பிளாக்ஸ், டெல்பினியம், பெட்டுனியா, ஸ்டாக்ஸ், கேலன்டுல்லா, லேடிலேஸ்,காஸ்மஸ்,வின்கா காம்பரினா ஸ்டேட்டிஸ், லிஸியான்தாஸ், ஜிப்ஸோபில்லா,டயான்தஸ் ஜினியா, ஸ்விட் வில்லியம்,செலோசியா, அமரான்தஸ், ப்ரிமுளா கிளியோம்,
சூரியகாந்தி ஆஸ்டர் லூபின், மற்றும் டேலியா,போன்ற நாற்றுக்கள் இடம் பெற்றுள்ளன.சிம்ஸ் பூங்காவில் முதன் முறையாகயூரோப் நாட்டினை தாயகமாக கொண்ட, ரெனன்குலஸ் என்ற, புதிய வகை மலர் நாற்றுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுஉள்ளது.மேலும் இவ்வருடம் 30 க்கும் மேற்பட்ட மலர்செடி வகைகள், மற்றும்
150 க்கும் மேற்பட்ட ரகங்கள், அமெரிக்கா ஜப்பான் ,பிரன்ஸ் ,ஜெர்மனி, நெதர்லாந்து,போன்ற நாடுகளிலிருந்து
வரவழைக்கபட்டு,நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.