தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை காவல்துறை பெற வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை காவல்துறை பெற வேண்டும்: சட்டம் – ஒழுங்கு நிலவரம் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சுசென்னை, ஜன.20-தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை காவல்துறை பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு, அதிகாரிகள் பலர் கூட்டத்தில் பங்கேற்றனர். சட்டம் – ஒழுங்கு பிரச்னையை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும், கொலை, கொள்ளை, பாலியல் கொடுமை, போக்சோ வழக்குகளின் நிலை குறித்தும் அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார். பின்னர் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை காவல்துறை பெற வேண்டும்.தமிழ்நாடு காவல்துறை மக்களின் நண்பனாக செயல்பட வேண்டும். மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் களப்பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் காவல் நிலையங்களுக்கு அடிக்கடி சென்று ஆய்வுகள் நடத்த வேண்டும். காவல் நிலையங்களுக்கு சென்றால் நீதி கிடைக்கும் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என கூறினார். தமிழ்நாட்டு மக்கள் சட்டம் – ஒழுங்குக்கு கட்டுப்பட்டு நடப்பவர்கள். காவல்துறை மக்களோடு இணைந்து உண்மையான நண்பனாக செயல்பட வேண்டும் எனவும் முதல்வர் தெரிவித்தார். மேலும் சிறப்பாக பணியாற்றும் காவலர்களை ஊக்குவிக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.