ரோஜ்கார் மேளா” வேலைவாய்ப்பு திட்டம், காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று

Loading

ரோஜ்கார் மேளா” வேலைவாய்ப்பு திட்டம், 3-வது கட்டமாக மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 71,000 பேருக்கு பணி ஆணைகளை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று வழங்கினார்.*வரும் 2030-ம் ஆண்டில் இந்தியாவில் குறைந்தபட்சம் 9 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவது அவசியம் என்று சர்வதேச நிதி அமைப்புகள் சுட்டிக் காட்டி உள்ளன. இதை கருத்தில் கொண்டு வேலைவாய்ப்புகளை பெருக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்திய இளைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள இடங்கள் குறித்து பிரதமர் மோடி கடந்த ஜுன் மாதம் விரிவான ஆய்வு நடத்தினார். அப்போது பல்வேறு துறைகளில் சுமார் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருப்பது தெரியவந்தது.இதைத் தொடர்ந்து அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார்.
இதன்படி கடந்த அக்டோபர் 22-ம் தேதி “ரோஜ்கார் மேளாவை” பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அன்றைய தினம் முதல்கட்டமாக 75,226 பேருக்கும், இரண்டாவது கட்டமாக கடந்த நவம்பர் 22-ம் தேதி 71,000 பேருக்கு அரசு பணிக்கான ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக வழங்கினார்.இதன்தொடர்ச்சியாக 71,000 பேருக்கு அரசு பணிக்கான ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக வழங்கினார். இதையொட்டி, சென்னையில் நடந்த ராஜா அண்ணாமலை புரத்தில் மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி பங்கேற்று 86 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.  தற்போது இந்த திட்டத்தின் மூன்றாவது கட்டமாக நாடு முழுவதும் ஜூனியர் இன்ஜினீயர், லோகோ பைலட், தொழில்நுட்ப உதவியாளர், உதவி ஆய்வாளர், ஸ்டெனோகிராபர், வருமான வரி இன்ஸ்பெக்டர்ஸ், ஆசிரியர்கள், மருத்துவர்கள்எனபல்வேறுபுதியபொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.  பணி ஆணை பெறவுள்ள இவர்களுக்கு தேசிய திறன் கட்டமைத்தல் திட்டமான `கர்மயோகி’ திறன் மேம்பாட்டு வகுப்புகளும் திட்டமிடப்பட்டுள்ளன.பீகார், மணிப்பூர், ஜம்மு காஷ்மீர், வெஸ்ட் பெங்கால், நியூ டெல்லி, தெலுங்கானா என நாடுமுழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து பணிநியமன ஆணைகளை வழங்க இருப்பவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடினார்…
இந்நிகழ்ச்சியில் சென்னை சுங்க மண்டல தலைமை ஆணையர் எம்.வி.எஸ் சௌத்ரி, வருமானவரித்துறை முதன்மை ஆணையர் ரவிச்சந்திரன், ஜி எஸ் டி முதன்மை ஆணையர் மண்டலிகா சீனிவாசன், வருமானவரித்துறை புலனாய்வுத்துறை இயக்குனர் சுனில் மத்தூர் ஆகியோர் பலர் பங்கேற்றனர்.
0Shares

Leave a Reply