புரட்சி பாரதம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
குடிநீர் தேக்க தொட்டியில் மனித மலம் கலந்ததை கண்டித்து புரட்சி பாரதம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுபுதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தேக்க தொட்டியில் மனித மலம் கலந்ததை கண்டித்தும், தொடர்ந்து பட்டியல் இன மக்களுக்கு எதிராக நடக்கும் வன்மத்தை கண்டித்தும் புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் சென்னை பனகல் மாளிகை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளரிடம் பேசிய புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அநீதி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இந்த பிரச்சினையில் அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார் மேலும் தொடர்ச்சியாக இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை அரசு தவறு செய்தவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார் மேலும் தொடர்ந்து இதில் போன்ற நிகழ்வு ஏற்படும் பட்சத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார். இந்த நிகழ்வில்மாநில துணை தலைவர் ஐ ஏழுமலை பொருளாளர் மாறன் துணைப் பொதுச் செயலாளர்கள் காமராஜ் பலராமன் வீரமணி மாநில செயலாளர்கள் சரவணன், முதன்மைச் செயலாளர்ருசேந்திர குமார் வழக்கறிஞர் பிரிவு தலைவர் சைமன் பாபு வரதையன் ரமேஷ் ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர்