நாக்பூரில் நடைபெறும் *இந்திய அறிவியல் மாநாட்டில் தமிழகத்திலிருந்து காரைக்குடி மாணவர்கள் பங்கேற்பு

Loading

இந்திய தேசிய தொழில்நுட்ப துறையும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்திய தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் ஸ்ரீ சரஸ்வதி விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற்றது. இதில் பல்வேறு ஒன்றியங்களில் இருந்து 86 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அதில் 9 ஆய்வு கட்டுரைகள் மாநில அளவில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வாகைகுளம் புனித அன்னை தெரசா பொறியியல் கல்லூரியில் டிசம்பர் 10,11 தேதிகளில் நடைபெற்ற தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து 9 பள்ளிகளில் இருந்து சென்ற மாணவர்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இதில் மாவட்டம் முழுவதிலிருந்து 550 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதிலிருந்து தேசிய அளவில் சமர்ப்பிக்க 30 ஆய்வுக் கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அதில் ஆங்கில வழி இளநிலைப் பிரிவில் மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி காரைக்குடி மாணவர்கள் ஸ்ரீ ஹரி நாகராஜ், யோகேஷ் குமரன் சமர்ப்பித்த ஆய்வு கட்டுரை எங்கள் சுற்றுச்சூழல் ஹீரோ கருப்பு வைரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 3 முதல் 7 ஆம் தேதி வரை மகாராஷ்டிரம் மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர். டி. எம். பல்கலைக்கழகத்தில் பாரதப் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் 108 வது இந்திய அறிவியல் மாநாட்டிலும், ஜனவரி 27ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறக்கூடிய தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிலும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். மாணவர்களை வழிகாட்டிய வழிகாட்டி ஆசிரியை மகாலட்சுமி மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கும், பெற்றோர்களுக்கும் இதற்காக உழைத்த அனைவருக்கும் சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். நம் மாவட்டத்தில் இருந்து மாநில மாநாட்டில் கலந்து கொண்ட 8 பள்ளிகளின் மாணவ மாணவிகள் வழிகாட்டி ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலப் பொருளாளர் ஜீவானந்தம், மாவட்டத் தலைவர் முனைவர் கோபிநாத், மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி, மாவட்ட பொருளாளர் ரகுநாதன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ், மாவட்ட இணைச் செயலாளர் ஆரோக்கியமேரி, மாவட்ட கௌவரவத் தலைவர் சாஸ்தா சுந்தரம் ஆகியோர் மாணவர்களை வெகுவாக பாராட்டினார்கள்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *