பாலக்கோட்டில் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பறிமுதல் .
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதிகளில் இயங்கும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் தடை விதிக்கப்பட்ட அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பயன்படுத்துவதால் அதிக ஒலியுடன் பொது மக்களை பாதிக்கும் வகையில் ஒலி எழுப்பி வருகின்றனர்.இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு தொடர்ந்து புகார்கள் வந்ததால் மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்களின் உத்தரவுப்படி தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில், பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி பாலக்கோடு பஸ் நிலையத்த்தில் வாகன சோதனை மேற்கொண்டார், அப்போது 20க்கும் மேற்பட்ட பேருந்துகளில் பொருத்தம் பட்டிருந்த ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் பயணிகளை ஏற்றி வந்த தனியார் பேருந்தை தணிக்கை செய்த போது எப்.சி. வாகன வரி, ஓட்டுநர் உரிமம், மற்றும் உரிய அனுமதியின்றி தீப்பெட்டி கம்பெனி பணியாளர்களுக்காக இயக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது, அதனை தொடர்ந்து பேருந்தை பறிமுதல் செய்து 2.50 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து வாகன சோதனை நடைபெறும் என்றும் எப்.சி, பர்மிட், வாகன வரி, ஓட்டுநர் உரிமம் இன்றி இயக்கப்படும் வாகனங்கள்பறிமுதல் செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மீண்டும் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டால் அபராதம் விதிக்கப்படுவதுடன் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஓட்டுநர்களை எச்சரித்து சென்றார்.