பாஜக சிறுபான்மை அணியினரின் ஆலோசனைக் கூட்டம்.

Loading

மதுரையில் பாரதிய ஜனதா கட்சி சிறுபான்மை அணியின் சார்பாக பாண்டி கோயில் அருகே உள்ள ஆர் ஆர் மஹாலில் மதுரை, கோவை, திருச்சி, சேலம் கோட்ட நிர்வாகிகள் சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சிறுபான்மையினர் அணி கோவை கோட்ட பொறுப்பாளர் பிஜி அலெக்ஸ் வரவேற்புரை ஆற்றினார். மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன், மேற்கு மாவட்ட தலைவர் சசிகுமார்  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன். தமிழக சிறுபான்மை அணி மாநில தலைவர் டாக்டர் டெய்சி தங்கையா, சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். சிறுபான்மையினர் அணி தேசிய தலைவர் ஜமால் சித்திக் ஏற்புரையாற்றினார். சிறுபான்மை அணி மாநில செயலாளர் ஷகிலா பானு நன்றியுரை ஆற்றினார். சிறுபான்மை அணி மாநில பொதுச் செயலாளர் கல்வாரி தியாகராஜன், இணை கோட்ட பொறுப்பாளர் மாநில செயலாளர் சாம் சரவணன், ஐ டி விங்க் மாநில செயலாளர் விஸ்வநாதன், இரு கண்கள் ஆசிரியர் ஜி பி பாஸ்கரன், ஐ டி விங்க் மாவட்ட தலைவர் மணிவண்ணன் மற்றும் நிர்வாகிகளும் கட்சித் தொண்டர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply