கோயம்பேடு பகுதியில் தங்கச் செயின் மற்றும் செல்போன் பறித்த ஆட்டோ ஓட்டுநர் கைது.

Loading

கோயம்பேடு பகுதியில் தங்கச் செயின் மற்றும் செல்போன்
பறித்த ஆட்டோ ஓட்டுநர் கைது. 1 ¾ சவரன் தங்கச்செயின் ,
ஒரு செல்போன் மற்றும் ஒரு ஆட்டோ பறிமுதல்.
சென்னை, காசிமேடு, 6வது தெரு, எண்.12/23 என்ற முகவரியில் வசிக்கும்
உதயசூரியன், வ/48, த/பெ.சின்னமலை என்பவர் நேற்று (07.08.2021) இரவு 10.00
மணியளவில் கோயம்பேடு 100 அடி ரோட்டில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம்
எடுத்துக்கொண்டு வெளியே வந்தபோது, அங்கு ஆட்டோவுடன் நின்று
கொண்டிருந்த நபர், மேற்படி உதயசூரியனை மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த 1 ¾
சவரன் தங்கச்செயின் மற்றும் 1 செல்போனை பறித்துக்கொண்டு தப்பியுள்ளார். இது
குறித்து உதயசூரியன் K-11 CMBT காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில்
வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
K-11 CMBT காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல்
குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட ஆட்டோ
ஓட்டுர் அப்பாஸ் (எ) சக்கரை முகமது, வ/30, த/பெ.முத்தலீப், எண்.25/13,
திருவள்ளுவர் சாலை, பர்மா நகர், தேனாம்பேட்டை, சென்னை என்பவரை கைது
செய்தனர். அவரிடமிருந்து 1 ¾ சவரன் தங்கச்செயின், 1
செல்போன் மற்றும் குற்றச்செயலுக்கு பயன்படுத்திய ஆட்டோ பறிமுதல்
செய்யப்பட்டது.
விசாரணைக்குப்பின்னர் கைது செய்யப்பட்ட அப்பாஸ் (எ) சக்கரை முகமது
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

0Shares

Leave a Reply