காசி ,மதுராவை மீட்டெடுக்க மத்திய அரசை வலியுறுத்தி அகில பாரத இந்து மகா சபா ஆர்ப்பாட்டம்

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மீனாட்சிபுரம் பணிமனை முன்பு   அகில பாரத இந்து மகா சபா அமைப்பை  சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்தியாவில் இந்து அமைப்புக்கு சொந்தமான இழந்த இடங்களை மீட்கவும் இருக்கும் இடங்களை பாதுகாக்கவும் காசி மற்றும் மதுராவை மீட்டெடுக்க மத்திய அரசை   வலியுறுத்தி அகில பாரத இந்து மகாசபா சார்பில் மாநில தலைவர் தா.பாலசுப்ரமணியன் தலைமையில்  மாவட்டம்  முழுவதும்  ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில்  அகில பாரத இந்து மகா சபா அமைப்பினர் மீனாட்சிபுரம் பகுதியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இந்தப் போராட்டத்தில் இந்து மகாசபா அகில இந்திய துணைத்தலைவரும் மாநில தலைவருமான  தா. பாலசுப்பிரமணியன் மற்றும் ஆர்பாட்டத்தில்   ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்டோரை டி.எஸ்.பி நவீன்குமார் தலைமையிலான போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்தனர். ஆனால் அங்கும் இங்குமாக போலீஸ் வாகனத்தில்  அவர்களை போலீசார் அலைய வைத்து அலைகளித்ததாக இந்துமகா சபாவின் குற்றச்சாட்டு…

0Shares

Leave a Reply