ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு.

Loading

ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக கோப்புகளை 2022ஆம்  ஆண்டிற்கான ஆண்டு தணிக்கையில் ஆய்வு , மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டார்.
ஆய்வின்போது எலவமலை,கதிரம்பட்டி, மேட்டு நாசமம்பாளையம் ,கூரப்பாளையம், பேரோடு பிச்சாண்டாம்பாளையம் ஆகிய ஆறு ஊராட்சிகளில் ஊராட்சி ஒன்றிய பொது நிதி திட்டம் ,பதினைந்தாவது நிதி மானிய திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல்ஜீவன் மிஷன் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் ,மற்றும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் .அலுவலக பதிவரை மற்றும் கணினி பிரிவில் ஆய்வு மேற்கொண்டு நிலுவையில் உள்ள கோப்புகளை உடனடியாக முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
 ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி ) ஜெகதீசன் வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) பி .தங்கவேல் , வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) க .லதா மற்றும்துறை சார்ந்த பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஆய்வின் போது உடன் இருந்தனர்.
0Shares

Leave a Reply