தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பாக உண்ணாவிரத போராட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். தட்சிணாமூர்த்தி, பிரவீனா, தனம், யோகலட்சுமி, சரிதா, நாகதேவி, கண்ணகி, நஸ்ரின்பானு, கல்பனா, கிருபன்கீர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெமிலி ஒன்றியம் தமிழ்ச்செல்வி அனைவரையும் வரவேற்றார். இதில் துவக்க உரையாக மாநிலச் செயலாளர் மலர், மாவட்ட தலைவர் வெங்கடாசலம், சரவணராஜ், பூசாமி, ஆறுமுகம், லோகநாதன், சுவாமிநாதன், ஜெயராமன், ஆனந்தன், சுசீலா, ரேணுகாதேவி, ஜெகதீசன் ஆகியோர் துவக்க உரை ஆற்றினர். இதில் தமிழக முழுவதும் உள்ள சத்துணவு மையங்களில் உள்ள காலி பணியிடங்களை சமூகநீதி கொள்கைகளுக்கு எதிராகவும், பெண்கள் நலனுக்கு எதிராகவும் ரூபாய். 3000 தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்ய முடிவு செய்துள்ள தமிழக அரசை கண்டித்து கவனயீர்ப்பு ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. முன்னாள் மாநில செயலாளர் ரவி நிறைவு உரை ஆற்றினார். மாவட்ட பொருளாளர் நளினி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இதில் சத்துணவு ஊழியர்கள் ஏராளமானவர் கலந்து கொண்டனர்.