வேலூர் மண்டல பேரூராட்சி உதவி இயக்குநரின் மெத்தன போக்கு அரசு பணியாளர் சங்கம் புகார்.

Loading

வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு அனைத்து பணியாளர் சங்க மாநில கெளரவ தலைவர் சி.ராஜவேலு. சென்னைபேரூராட்சிஆணையரகத்திற்கு அனுப்பி உள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேரூராட்சி துப்புரவு மேற்பணியாளர் பணியிடம் பூர்த்தி செய்வதை எங்கள் சங்கம் மூலம் புகார் மனு அனுப்பி இருந்தோம் (கடிதம் எண்15/2022)
அதில் தாங்கள் வேலூர் மண்டல பேரூராட்சி உதவி இயக்குநர் மனுவின மீது விதிகளின் படி நடவடிக்கைஎடுக்க அறிவுறுத்தி கடிதம் அனுப்பி இருந்தீர்கள், ஆனால் வேலூர் மண்டல பேரூராட்சி உதவி இயக்குநர் அதை அப்படியை கலவை பேரூராட்சி செயல் அலுவலருக்கு அனுப்பி வைத்து உள்ளார். ஆனால் எந்த நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கெளரவத் தலைவர் சி.ராஜவேலு, சென்னை பேரூராட்சி ஆணையரக இணை இயக்குநர்பொதுஉமாமகேஸ்வரிக்கு மீண்டும் புகார் மனு அனுப்பி உள்ளார்.
0Shares

Leave a Reply