ஆதார் பிரிவில் ஊழியர் பற்றாக்குற
ஆதார் பிரிவில் ஊழியர்கள் பற்றாக் குறையால் பாதிக்கப்படும் பொது மக்கள்:
இன்றைய கால கட்டத்தில்
ஆதார் கார்டு என்பது பொது மக்கள் மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கு செல்லும் போதும், தங்களின் சொந்த வேலைகளுக்கு செல்லும் போதும்,
ஆதார் கார்டு, அதார் எண் வேண்டும் என்ற மிக முக்கியதுவம் வாய்ந்த இன்றைய சூழ்நிலையில் ,
நீலகிரி மாவட்டம் குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் ஆதார் பிரிவில் இரண்டு ஊழியர்கள் பணியாற்றி வந்த நிலையில் தற்போது சில காலமாக ஒரு ஊழியர் மட்டுமே பணியாற்றுவதால் ,
இந்த பிரிவில் ஆதார் கார்டில் உள்ள பிழைத்திருத்தங்கள் நீக்குதல் ,
புதிய ஆதார் கார்டு விண்ணப்பிக்க குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள், பள்ளி மாணவர்கள், மாற்றுதிறனாளிகள், பொது மக்கள் என பலத்தரப்பினரும் வெகு நேரம் காத்திருக்கும் சூழ்நிலை, ஊழியர்கள் குறைபாட்டால் சில நேரங்களில் வெகுநேரம் ஆகிவிடுதால்
இந்த அலுவலகத்தில் ஆதார் கார்டு விண்ணப்பிக்க வரும் ஒரு சில பொது மக்கள் மன உளைச்சலுடன் மிண்டும் மறுநாள் வரவேண்டிய நிலை!பள்ளி மாணவர்கள் பள்ளிகூடம் சென்று கல்வி கற்க முடியாமல் பள்ளிகளுக்கு விடுமுறை எடுக்க வேண்டிய நிலை.
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று தமிழக அரசால் பொது மக்களுக்கு வழங்கபடும் பல நல்ல திட்டங்ளை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொது மக்களுக்கு வழங்கி மிக சிறப்பாக செயல்படுத்தி வரும் நிலையில்,
குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதார் பிரிவில் உள்ள ஊழியர்கள் பற்றாக்குறையினை நீக்கி கூடுதல் ஊழியர்களை பணியமர்த்தி ஆதார் சேவையில் பொது மக்கள், மாணவர்கள்
பாதிக்கபடாமல் இருக்க,
நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும்,
குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் அவர்களும்,உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொது மக்கள் மற்றும் சமுக ஆர்வலர்களின் கோரிக்கை.