சென்னையில் மதுபான கடை திறக்க தடை

Loading

சென்னை திருவொற்றியூர் ராஜா கடை ராமானுஜம்  தெருமுனையில் மதுபான கடை திறக்கப்படுவதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் வந்ததை அடுத்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டதால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது.தகவல் அறிந்து வந்த 12 வது வட்டம் மாமன்ற உறுப்பினர் வி கவி.கணேசன் அப்பகுதி பொதுமக்களை சந்தித்து மாமன்ற தேர்தலில் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்றுவேன் நிச்சயம் இந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க அனுமதிக்க மாட்டேன் இது சம்பந்தமாக முதல்வரை சந்திக்க போவதாக பொதுமக்களிடம் தெரிவித்தார்.கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அப்பகுதி மக்கள் டாஸ்மாக் எம்.டி உள்ளிட்ட டாஸ்மார்க் துறை அதிகாரிகளை சந்தித்து டாஸ்மார்க் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுக்களை அளித்துள்ளனர்.அதேபோல் திருவொற்றியூர் காவல் உதவி ஆணையர் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியரையும் சந்தித்து இந்த பகுதிக்கு டாஸ்மாக் வரக்கூடாது என்று மனு அளித்துள்ளனர்.டாஸ்மாக் கடை திறக்கப் போவதாக அறிவித்த கடையின் அருகில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று உள்ளது.அதேபோல் ராமானுஜம் தெருவில் அம்மன் கோவில் மற்றும் பிள்ளையார் கோவில்,அருகில் கிறிஸ்தவ திருச்சபை,இரண்டு பள்ளிக்கூடங்கள் மற்றும் நீதிமன்றம் உள்ளது.இந்த டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அருகில் உள்ள திருவள்ளுவர் தெரு மற்றும் டி.எச்.ரோட்டில் வசிக்கும் பொதுமக்களும் அதிகாரிகள் மற்றும் காவல் துறைக்கு புகார் மனு அளித்துள்ளனர். இதையடுத்து காவல்துறை உதவி ஆணையர் மற்றும் காவல்துறை ஆய்வாளர் பொதுமக்களை அந்த பகுதிக்கே சென்று சந்தித்தனர்.இந்த மதுபான கடை வருவதினை தடுத்திட 12வது வட்ட மாமன்ற உறுப்பினர் கவி.கணேசன் மற்றும் 7வது வட்ட மாமன்ற உறுப்பினர் கார்த்திக் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை கடிதம் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *