தடம் பிரச்சனையால் கொலை “வெறி தாக்குதல்” ! . ஈரோடு எஸ்.பி., யிடம் புகார்.!

Loading

ஈரோடு நவம்பர் 6
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே விவசாய நிலத்தில் தடம் கேட்டு பிரச்சனை காரணமாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட  மோதலில்  இரண்டு பெண்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அந்தியூர் அம்மன் பாளையம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் பி முருகேசன் இவருக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலம் விவசாயம் செய்து வருகிறார் இவர்கள் பூர்வீக சொத்தில் பழனிசாமி சகோதரர்கள் சித்தையன், சுப்பிரமணியன், குருசாமி ஆகியோருக்கு பாத்தியப்பட்டது ,குருசாமி இறந்து விட்டதால் சுப்பிரமணியன் சித்தையன் ஆகியோரது பாகத்தை தங்கராசு என்பவர் கடந்த 2018 கிரயம் பெற்றார் ,பிறகு C  முருகேசன் அந்த நான்கு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார் பி முருகேசன் முறையாக தடம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது ஆனால் சி முருகேசன் தற்போது அறுவடை செய்த பிறகு தடம் அளந்து தருகிறேன் என பேசியவர் தடம் ஏற்படுத்தி தராமல் மீண்டும் பயிர் வைப்பதற்கு முற்பட்டார் இதனால் இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது பிறகு நேற்று முன்தினம் 4  ஆம் தேதி  பி முருகேசன் அவரது தாய் புஷ்பா, மனைவி கிருத்திகா ஆகியோரை, சி முருகேசன் அவரது மனைவி சாந்தாமணி மற்றும் மகன் திபின், அவருடன் ஏழு பேர் கொண்ட கும்பல் இரும்பு கம்பி பிளாஸ்டிக் பைப் ஆகியவற்றால் வெறித்தனமாக தாக்கியதில் பி முருகேசனது தாய் புஷ்பா தலையில் பலத்த காயம் ஏற்பட்டது அவரது மனைவி கிருத்திகாவிற்கு பலத்த காயம் ஏற்படுத்தி அவரது மார்பகத்தில் பெண் என்றும் பாராமல் கடித்து காயத்தை ஏற்படுத்தியதாக புகார் மனுவில் தெரிவித்துள்ளார் பாதிக்கப்பட்டவர்கள் பெருந்துறை ஐ ஆர் டி டி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர் தடம் பிரச்சனையால் கொலை வெறித்தாக்குதல் நடத்திய சி முருகேசன் அவரது மனைவி சாந்தாமணி மற்றும் மகன் திபின் ஆகியோரை கைது செய்ய ஈரோடு மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் மனுவை பி பழனிச்சாமி அளித்துள்ளனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *