மனநலம் பாதிக்கப்பட்ட பெண்
![]()
பேரணாம்பட்டு அருகே மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த இளம் பெண்ணை மீட்ட வருவாய்த்துறையினர்*
பேர்ணாம்பட்டு. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த மசிகம், மிட்டப்பள்ளி கிராம ப்பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக இளம் பெண் ஒருவர் சாலையில் சுற்றி திரிந்துள்ளார். மேலும் அந்தப் பெண்ணிடம் அப் பகுதி மக்கள் யார் என விசாரித்ததில் அவர் யாரிடமும் பேசாமல் இங்கும் அங்கு சுற்றி வந்துள்ளார்.
இதனிடையே நேற்று முன்தினம் இரவு மசிகம் பகுதியில் உள்ள ஆம்பூர் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே அந்தப் பெண் சுற்றி திரிந்துள்ளார் அதைக் கண்ட அப் பகுதி மக்கள் இதுகுறித்து பேர்ணாம்பட்டு வருவாய்த்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பேர்ணாம்பட்டு வருவாய்த்துறையினர் அந்த இளம் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் தெளிவாக எதையும் கூறவில்லை. தனது பெயர் ரோசி தனக்கு அப்பா அம்மா உள்ளதாகவும் சென்னை அடுத்த ஐயப்பன் தாங்கல் தனது ஊர் என்றும், தான் ஒரு மருத்துவ கல்லூரி மாணவி எனவும் கூறிக் கொண்டார். தன்னிடமிருந்த ரூபாய் நோட்டுகளை அவர் கிழித்து எறிந்து விட்டு உள்ளார்.
குளித்து பல நாட்களாகி மிகவும் சோர்வுடன் காணப்பட்ட அந்த இளம் பெண்ணை 108 ஆம்புலன்ஸ் மூலம் பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு முதல் உதவிக்காக அனுப்பி வைக்கப்பட்டு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அங்கிருந்து வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் அந்த இளம் பெண் எந்த ஊரை சேர்ந்தவர் யார் என்பது குறித்தும் வருவாய்த்துறையினர் மற்றும் பேரணாம்பட்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .இரவு நேரத்தில் இளம் பெண்ணை மீட்ட வருவாய் துறையினரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

