தீபாவளி ஸ்பெஷல்: மூன்றே நாளில் 708 கோடிக்கு மதுபானங்களை விற்பனை செய்து தமிழகம் சாதனை மாநிலத்திலேயே முதலிடம் பிடித்தது மதுரை

Loading

 

சென்னை, அக்- 26

தீபாவளி பண்டிகையையொட்டி மூன்றே நாட்களில் 708 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. துாங்காநகரம் மதுரை மதுபானங்கள் விற்பனையில் முதலிடம் பிடித்திருக்கிறது

 

இரண்டாவது இடத்தில் சென்னை

தமிழ்நாட்டில் தீபாவளி கொண்டாட்டத்தையொட்டி சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை ஆகிய மூன்று நாட்கள் 708 கோடி அளவுக்கு மதுபானங்கள் விற்பனையாகியிருக்கிறது. தூங்க நகரமாம், என்றும் சங்கம் வளர்த்த மாநகரம் என்று பெருமையுடன் போற்றப்படும்  மதுரை மாநகரத்தில்   மாநிலத்திலேயே அதிகமாக ரூ 100 கோடிக்கு விற்பனையாகி முதலிடத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன, தீபாவளியன்று மட்டும் ஓரே நாளில் 244.8. கோடிக்கு குடிமக்கள் குடித்து தீர்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது., தலைநகரமான சென்னையில்  90 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது

 

சாதனையல்ல: அவமானம்

 

இதற்கிடையில் மூன்றே நாளில் ரூ 708 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி இருப்பது சாதனை அல்ல: அவமானம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார், இது குறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவுச

தமிழ்நாட்டில் தீப ஒளி திருநாளுக்கு முந்தைய நாளான  தீபாவளியன்று ரூ. 259 கோடிக்கு மது விற்பனையாகியிருக்கிறது. தீப ஒளி நாளான இன்று ரூ.300 கோடிக்கும் கூடுதலாக மது விற்பனை செய்யப்படக்கூடும் என்று  டாஸ்மாக் தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன! கடந்த ஆண்டு தீபஒளி திருநாளுக்கு முதல் நாளில் ரூ.205 கோடிக்கும், தீப ஒளி நாளில் ரூ. 225 கோடிக்கும்  மது விற்பனையான நிலையில், அதை விட இந்த ஆண்டு அதிகமாக மது விற்பனையாகியிருக்கிறது. மது விற்பனை அதிகரித்திருப்பது எந்த வகையிலும் சாதனையல்ல…. அவமானம்!
நிரந்தர மதுவிலக்கு

இரு நாட்களில் மதுவுக்காக செலவிடப்பட்ட சுமார் ரூ.600 கோடி ஆக்கப்பூர்வமாக செலவிடப்பட்டிருந்தால், லட்சக்கணக்கான  ஏழைக் குடும்பங்களின் குழந்தைகளுக்கு புத்தாடைகளும், இனிப்புகளும் கிடைத்திருக்கும். லட்சக்கணக்கான குடும்பங்களின் மகிழ்ச்சியை மது பறித்திருப்பது வேதனையானது!. தீப ஒளி, பொங்கல் போன்ற திருவிழாக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட வேண்டுமானால் அந்த காலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும்.  அடுத்தக்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி மது விலக்கை  நடைமுறைப்படுத்த வேண்டும்! இவ்வாறு அந்த டுவிட்டர் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்,

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *