சிங்காரத்தோட்டம் டெக்ஸ்டைல்ஸ் வியாபாரிகள் நல சங்கம் சார்பாக ஆயுத பூஜையை முன்னிட்டு 100பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி

Loading

சிங்காரத்தோட்டம் டெக்ஸ்டைல்ஸ் வியாபாரிகள் நல சங்கம் சார்பாக ஆயுத பூஜையை முன்னிட்டு 100பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை சிங்காரத்தோட்டம் 6வது சந்தில் உள்ள சிங்காரத்தோட்டம் டெக்ஸ்டைல்ஸ் வியாபாரிகள் நலசங்கம் ஏற்பாட்டில் பள்ளி மாணவ,மாணவியர்கள் 100நபர்களுக்கு ரூபாய் ஆயிரம் கல்வி ஊக்கத்தொகையாக வழங்கபட்டது.இதனையடுத்து தூய்மை பணியாளர்களுக்கும் புத்தாடைகள் வழங்கினர்.
இந்நிகழ்வில் சிங்காரத்தோட்டம் டெக்ஸ்டைல்ஸ் வியாபாரிகள் நல சங்க தலைவர் பட்டவெட்டி டி.உதயராஜ் வரவேற்புரையாற்றி நிகழ்ச்சி துவங்கியது.
இதனையடுத்து கெளரவதலைவர் சிந்து எம்.நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மகேந்தர் வடேரா,எஸ்.எம்.முத்துவாப்பா,எச்.ரமேஷ் படேல்,எச்.தமீன் அன்சாரி,எச்.மொய்தீன்,கே.மவுஷாம் பாஷா ஆகியோர் இணைந்து இந்நிகழ்ச்சியை சிறப்பாக செய்தனர்.
இதில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள்,சுமை தூக்கும் தொழிலாளர்கள் பொதுமக்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *