தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் சமூக நீதி நாளை முன்னிட்டு  இன்று மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் உறுதி மொழி.

Loading

தூத்துக்குடி மாவட்டம்: 17.09.2022*
*தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் சமூக நீதி நாளை முன்னிட்டு  இன்று மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் உறுதி மொழி.*
*இன்று (17.09.2022) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் சமூகநீதி நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் கீழ்கண்டவாறு உறுதிமொழி எடுக்கப்பட்டது.*
*‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற அன்பு நெறியும் – ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற பண்பு நெறியும் எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன்.!*
*சுயமரியாதை ஆளுமைத் திறனும் – பகுத்தறிவு  கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்.*
*சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்.*
*மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும்.*
*சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்.” என்று உறுதி மொழி எடுக்கப்பட்டது.*
*இந்த உறுதிமொழியில் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஜெயராஜ், மாவட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. பேச்சிமுத்து, காவல் கட்டுபாட்டு அறை ஆய்வாளர் திரு. ரேனியஸ் ஜேசுபாதம், மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. ஜெரால்டின் வினு உட்பட காவல்துறையினர் மற்றும் மாவட்ட காவல்துறை அலுவலக நிர்வாக அலுவலர் திரு. சிவஞானமூர்த்தி, அலுவலக கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.*
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *