தமிழக அரசை கண்டித்து, SDPI கட்சி நடத்திய சட்டமன்றம் நோக்கி கருஞ்சட்டை பேரணி!!
தமிழக அரசை கண்டித்து,
SDPI கட்சி நடத்திய சட்டமன்றம் நோக்கி கருஞ்சட்டை பேரணி!!
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் செப்-15 அண்ணா பிறந்தநாளன்று,முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் மற்றும் ஆறு தமிழர்களை விடுதலை செய்யக்கோரி தமிழக அரசை கண்டித்து,
SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்,
இதில் மாநில தலைவர் நெல்லைமுபாரக்,
திருமுருகன் காந்தி (ஒருங்கிணைப்பாளர் மே 17 இயக்கம்),
தியாகு(பொதுசெயலாளர் தமிழ்தேச விடுதலை இயக்கம்), நிஜாமுதின்(செயலாளர் ஜம்மியத் உலமாயே ஹிந்த்) ,
ஷேக் முகமது அன்சாரி, வன்னியரசு(துணை பொதுசெயலாளர் விசிக) உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
போராட்டத்தில் கட்சி தொண்டர்கள், தலைவர்கள், மகளிரணி சார்பில் பெண்கள் உட்பட 2000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் பாதுகாப்பிற்காக 200 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் நிறுத்திவைக்கப்பட்டது..
பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில தலைவர் நெல்லை முபாரக்,
37 முஸ்லிம் சிறை வாசிகளையும் ஆறு தமிழர்களையும் உடனடியாக 161 என்ற அதிகாரத்தை பயன்படுத்தி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்
முஸ்லிம்களையும் தமிழர்களையும் பாஜக எவ்வாறு கையாளுகிறதோ, அதே அணுகுமுறையை தமிழக அரசு கையாள கூடாது என்று கடுமையாக எச்சரிக்கிறோம்
முதலமைச்சர் கூறிய,
சமூக நீதி என்பது சலுகை அல்ல தமிழக அரசின் கடமை என்பதை வரவேற்கிறோம், அதில் முஸ்லிமினருக்கும், தமிழினருக்கும் இடம் இருக்கிறது என்பதை நினைவூட்டுகிறோம்
தமிழக முதல்வருக்கு 2 கோரிக்கைகள் வைப்பதாகவும் அவை,
பத்திரிகையாளர்கள் மூலமாக சிறுபான்மை சமூக அமைப்பு,
தமிழ் தேசிய அமைப்புகள் இடத்தில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பதை வெட்ட வெளியாக கூற வேண்டும் என்றும்,
ஒரு வருட காலத்தில்,ஆதிநாதன் குழுவை தவிர வேற எந்த முடிவும் தமிழக அரசு எடுக்கவில்லை
செப்டம்பர் 15ஆம் தேதி நாங்கள் கெடுவாக வைத்திருக்கிறோம் நாங்கள் குறிப்பிடுகிற அத்தனை சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும்
எடப்பாடி அரசு நிறைவேற்றிய தீர்மானங்களை கூட தமிழக அரசு செய்யவில்லை
கோரிக்கை நிறைவேற்ற தவறினால் வருகிற நாடாளுமன்றத்தில் திமுக கூட்டணி எப்படி சந்திக்க போகும் என்ற கேள்விக்கு?
கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் மக்களை சந்தித்து வாக்குகள் கேட்பதில் திமுக அரசுக்கும் அந்த கூட்டணிக்கும் மிக பலவீனமாக அமையும் என கூறினார்..