கோவை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கழக பொது செயளாளர் வைகோ பேட்டி

Loading

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், மதிமுக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் புறநகர் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, இந்த கூட்டத்திற்கு மதிமுக பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டார், கூட்டத்தின் வாயிலாக செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறியதாவது..
மதிமுக கட்சி புத்துணர்ச்சி பெற்று  மீண்டும் தமிழகத்தின் அரசியல்  திசையை தீர்மானிக்கும் சக்தியாக மாறி வருகின்றது. இடையில் கொரோனா தொற்று காரணமாக, நான் பாதிக்கபட்டு அரசியல் சுற்று பயணத்திற்கு செல்லாமல் இருந்தேன். அந்த பயணத்தை மீண்டும் கோவையிலே துவங்குவது என்று தீர்மானிக்கப்பட்டு கோவையில்  துவங்கி இருப்பதாகவும், இந்த கோவை மாவட்டத்தில் ஒரு லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கை  நடைபெற்றுள்ளது, அடுத்த கட்டத்திலும் இதே போல் உறுப்பினர் சேர்க்கை நடைபெறும் எனவும், அதேபோன்று அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் பிரம்மாண்ட கூட்டம் நடைபெற உள்ளது.
இதற்காக பிரத்தியேகமாக ஒரு  மண்டபம் பிடிக்கப்பட்டுள்ளது, அந்த மண்டபத்தின் உள்ளே 5000 பேர் இருக்கலாம், வெளியில் 5000 பேர்  இருக்கலாம், மண்டபத்திற்கு ஆகும் செலவினங்கள்  கோடிக்கணக்கில் ஆகும் என்ற நிலை இருந்தாலும், பொருளாதார வளம் தங்களிடம் இல்லை, ஆனாலும் கூட்டத்தை நடத்துகின்ற லட்சிய தாகம் தங்களுக்கு இருக்கின்றது என தெரிவித்தார்.
மேலும் இந்த கூட்டத்திற்கு கலந்து கொள்ள முடியாதவர்கள் அந்தந்த மாவட்ட பகுதிகளில் கொடி ஏற்றி விழாவை சிறப்பிப்பார்கள் எனவும், இது பற்றி கட்சி நிர்வாகிகளிடம் நான்  தெரிவித்த பின்னர் அதன் செயல்பாடுகள் குறித்து நேற்றும் இன்றும் ஆய்வு செய்த பொழுது, உணர்ச்சி மிக்க அந்தப் பணிகளை  நிர்வாகிகள் முன்னெடுத்து வருகின்றனர்.மதிமுக கட்சியானது திமுகவுடன் லட்சிய தாகத்தோடு இணைந்து பணியாற்றி வருகின்றது, சனாதன சக்திகளை வீழ்த்துவதற்கும், ஏகாதிபத்திய சக்திகளை வீழ்த்துவதற்கும்  ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே மதம், என்று சொல்லக்கூடிய இந்த ஏகாத பத்திய பாசிச சிந்தனைகளை கொண்ட கட்சிகளை வீழ்த்துவதற்கும்  அண்ணாவின் வழியிலே கலைஞரை எப்படி கொள்கைகளை பாதுகாத்து வந்தாரோ, அதேபோல திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு க ஸ்டாலினும் செயல்பட்டு வருகின்றார்.
புதிய  திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றது, வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவிற்கு இவ்வளவு திட்டங்கள் அறிவிக்கப்படவும் இல்லை. அதை செயல்படுத்தப்படவும் இல்லை, தமிழகத்தில் மட்டுமே இவ்வாறு அதிகப்படியான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது, திராவிட முன்னேற்ற கழகம் கொள்கை ரீதியான ஆட்சி எனவும், பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முன்னோடியாக திகழ்ந்து வருகின்றது, அவர்களோடு மதிமுக கட்சி நல்ல புரிதலோடு இருக்கின்றது, நல்ல தோழமை இருக்கின்றது,
அந்த நம்பிக்கையில் இனி வரும் தேர்தல்களில் நாங்களும் வெற்றி பெற்று செல்வோம் என்று தெரிவித்தார், தற்பொழுது மத்திய அரசு விதித்துள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து பேசியவர் உணவு பண்டங்களுக்கு கூட மத்திய அரசு வரியை விதித்திருப்பது, வேதனைக்குரியது, எனவும் இதனால் பாதிக்கப்படுவது அனைத்தும், பொதுமக்கள் தான் எனவும், இந்த வரி விதிப்பின் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள், தவிர அதானியோ, அம்பானியோ பாதிக்கப்படுவதில்லை என்று தெரிவித்தார்,
மாதச் சம்பளம் வாங்குபவர்கள், கூலி வேலை செய்பவர்கள் மட்டுமே இதுபோன்ற திட்டங்களால் பாதிக்கப்பட்டு வருகின்றதாக குற்றம் சாட்டினார், பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக அனைத்து பொருட்களும் விலை ஏறும் நிலைக்கு தள்ளப்பட்டு விலை ஏறி வருகின்றது, இதுபோன்ற செயல் மத்தியில் ஆளக்கூடிய மத்திய அரசின் மீது தினம் தோறும் மக்களுக்கு வெறுப்பை அள்ளி வீசுகின்ற வகையில் செயல்பட்டு  வருகின்றது என்று தெரிவித்தார்,
வருகின்ற 75 ஆவது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு மத்திய அரசு அனைத்து வீடுகளிலும் கொடியேற்ற கூறியிருப்பது குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, எந்த ஒரு கட்சியின் கொடியையும் ஏற்ற சொல்லவில்லை, நமது நாட்டின் தேசிய கொடியை தான் ஏற்ற சொல்லி இருக்கிறார்கள், இது நல்ல விஷயமாக நான் கருதுகிறேன் என்றார், ரஜினிகாந்த்  ஆளுநரை சந்தித்தது குறித்து  செய்தியாளர் எழுப்பிய  கேள்விக்கு, ரஜினிகாந்த் தெரிவித்தது அவருக்கும் புரியவில்லை,
யாருக்கும் புரியவில்லை, ரஜினியை பொறுத்தவரையில் ஒரு நாள் நான் அரசியலுக்கு வருவேன் என்கிறார், அடுத்த நாள் உறுப்பினர் சேர்க்கை துவங்கி விட்டது என்கிறார்  அனைவரும் வந்த பின்னர் நான், அரசியலுக்கு வரவில்லை என்று பின்வாங்கி விடுகிறார், மேலும் அதனை வெளிப்படையாக தெரிவிக்காமல், பால்கனியிலிருந்து கையை அசைத்தபடி சென்று விடுகிறார்,
எனவே அவருடைய செயல்பாடுகளை யாரும் சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று தெரிவித்தபடி விடை பெற்று சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது, இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மதிமுக மாநாகர் செயளாளர் ஆர்ஆர் மோகன் குமார் முன்னெடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0Shares

Leave a Reply