மதுரையில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு முதலுதவி சமூக நல அறக்கட்டளை மற்றும் மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் வாகன ஓட்டுநர்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் துணிப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி
மதுரையில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு முதலுதவி சமூக நல அறக்கட்டளை மற்றும் மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் வாகன ஓட்டுநர்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் துணிப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி*
மதுரை மாரியம்மன் தெப்பக்குளம்
மருதுபாண்டியர் சிலை அருகில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு
முதலுதவி சமூக நல அறக்கட்டளை மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையுடன் இணைந்து மரகன்றுகள், முகக்கவசம்,
மற்றும் மஞ்சள் பை வழங்கும் நிகழ்ச்சியில் மதுரை மாநகர போக்குவரத்து காவல் உதவி ஆணையர் மாரியப்பன் அவர்கள் தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அ.தங்கமணி ஆகியோர் தலைமையில் வழங்கப்பட்டது. இவ்விழாவில் பொதுமக்களிடையே சுற்றுப்புற சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வாகன ஓட்டுனர்கள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடித்து பாதுகாப்புடன் பயணம் செய்யவும் தமிழக அரசின் ஆனைப்படி பெரும் நோய் தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ளும் வகையில் முகக்கவசம் அணியவும், பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளை பயன்படுத்த அறிவுறுத்தி வாகன ஓட்டுநர்களுக்கும்,பொதுமக்களுக் கும சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் விதமாக மரக்கன்றுகளும், மஞ்சள் துணிப்பை மற்றும் முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் முதலுதவி சமூக நல அறக்கட்டளையின் மாநில பொதுச்செயலாளர் முனைவர் சி.அர்சத் முபின், ஆலோசகர் பிரபு, மாநிலத் துணைத் தலைவர் சையது ரியாஸ் கான், மதுரை கல்யாண், ரூபி, அசோக்குமார் பாலாஜி, இம்தியாஸ், நாகூர் அபு உள்பட அறக்கட்டளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.