பிரதமர் மோடி வருகை: சென்னையில் நாளை போக்குவரத்தில் மாற்றம்

Loading

சென்னை, சென்னைப் பெருநகரப் போக்குவரத்துக் காவல் துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- 44-வது உலக துரங்கப் போட்டியின் துவக்க விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில் நாளை 28.07.2022 மாலை நடைபெறுகிறது.

அந்த நிகழ்ச்சியில்பிரதமர், தமிழ் நாடு கவர்னர், முதல்-அமைச்சர், மத்திய மந்திரிகள், அமைச்சர்கள், பல்வேறு நாடுகளைச் சார்ந்தச் சதுரங்க விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துக் கொள்ள உள்ளார்கள். எனவே சென்னைப் பெருநகரப் போக்குவரத்துக் காவல் துறை சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும் 28.07.2022 நண்பகல் முதல் இரவு 21.00 மணிவரையில் ராஜா முத்தைய்யாச் சாலை, ஈவெரா பெரியார் சாலை, மத்தியச் சதுக்கம், அண்ணாசாலை (ஸ்பென்சர் சந்திப்பு வரை) மற்றும் சுற்றியுள்ளப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *