சென்னை தண்டையார் பேட்டை வார்டு41 சிவாஜி நகர் பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்

Loading

சென்னை தண்டையார் பேட்டை வார்டு41 சிவாஜி நகர் பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

9வது10வது குறுக்கு தெரு சந்திப்பில் உயர் அழுத்த மின்சார இணைப்பில் அடிக்கடி பழுது ஏற்படுவதால் மின் இணைப்பு துண்டிக்கபடுகிறது.

அதேபோல் மின்சார வாரியம் 9வது மற்றும் 10வது குறுக்கு தெருவில் தற்காலிக பணியாக உயர் மின் அழுத்த வயர்கள் பள்ளம் தோண்டி பதிக்கபடாமல் அபாயநிலையில் அப்படியே வெளி பகுதியில் தரைமட்டத்தில் உள்ளது.இதனால் விபத்து ஏதேனும் ஏற்படுவதற்குள் தரமான புதிய உயர் மின் அழுத்த வயர்கள் பாதுகாப்பான முறையில் பதித்து.தொடர் மின் வெட்டு ஏற்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்..

0Shares

Leave a Reply