வேலூர்வி.ஐ.டிபல்கலைகயில் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி. விஐடி துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் துவக்கிவைத்தார்
![]()
.
வேலூர் ஜூன் 22
வேலூர் மாவட்டம் காட்பாடியில் தொழிற்கல்விபயிலும்மாணவர்களின் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் பாடதிட்டம் பாடநூல்கள்சீரமைக்கப்பட்டுள்ளதா ல் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு மாநில முழுவதும் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இணைய வழி (ONLINE) திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் இன்’று முதல் விஐடி பல்கலைகழக வளாகத்தில் உள்ள கணினி மையத்தில் அளிக்கப்படும் இப் பயிற்சியை துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் துவக்கிவைத்தார்.
வேலூர் வி.ஐ.டி பல்கலைகலைகழக வளாத்தில் நடைபெற்ற நிகழ்வில் துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் அவர்கள் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்கள். அப்போது அவர் கூறியதாவது.. மெல்ல கற்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாணவர்கள் கல்வி பெறும் போதே திறன்களை வளர்த்துக்கொள்ளதக்க வகையில் கல்வி திட்டம் இக் கல்வியாண்டு முதல் மாற்றியமைக்கப்பட உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சியினை விஐடி பல்கலைகழகம் இணைந்து அளிப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
முன்னதாக தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்று பேசினார். க.ராஜா, ரமேஷ், கே.பழனி, இ.ராமன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். வேலூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்கல்வி ஆசிரியர்கள் சு.செல்வபாரதி க.சத்யபாமா, ஜி.பொற்செல்வி, ஜி.பழனி, டி.பிச்சாண்டி, எஸ்.கோபி, எம்.நாகலிங்கம், கே.பி.சிவஞானம், எஸ்.பிச்சைகண்ணு உள்ளிட்டோர் பேசினர்.வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தின் சார்பில் பயிற்சிஒருங்கிணைப்பாளர் கோபி நன்றி கூறினார்.

