தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கத்தின் சார்பாக 1.05.2022 மாலை 4 மணியளவில் உலக கால்நடை மருத்துவ தினம் ரத்னா ரெஸிடன்சி ஹோட்டலில் சிறப்பாக கொண்டாடப்பட்டது
தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கத்தின் சார்பாக 1.05.2022 மாலை 4 மணியளவில் உலக கால்நடை மருத்துவ தினம் ரத்னா ரெஸிடன்சி ஹோட்டலில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. உலக கால்நடை மருத்துவ தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் கடைசி சனிக்கிழமை அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் “Strengthening of Veterinary Resilience” என்ற கோட்பாட்டினை நிலைப்படுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது.
அதாவது கால்நடை மருத்துவத்தில் உள்ள சவால்களை எதிர்கொண்டு கால்நடை மருத்துவத்தை தொழில்நுட்ப அடிப்படையில் விரிவுபடுத்துதல் என்பதே இதன் பொருள் ஆகும். இவ்விழாவில் 40 கால்நடை உதவி மருத்துவர்கள் தங்கள் குடும்பத்துடன் கால்நடை மருத்துவ உறுதிமொழி “Veterinary Oath” எடுத்துக்கொண்டு இச்சமுதாயத்தில் கால்நடை மருத்துவ சேவையை திறம்பட செய்வதென உறுதி பூண்டனர்.
இவ்விழாவில் டாக்டர். ராஜேஷ் விழுப்புரம் மாவட்ட கால்நடை உதவி மருத்துவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கால்நடை மருத்துவர்களுக்கு கால்நடைகளின் நோய்களை கண்டறிதலும் அதற்கான சிறப்பு மருத்துவ உத்திகள் குறித்து தொழில்நுட்ப உரை நிகழ்த்தினார்.இவ்விழா ஏற்பாடுகள் டாக்டர். பிரேம்குமார், டாக்டர். ஈஸ்வரி மற்றும் டாக்டர். முருகானந்தம் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.