காஜலுடன் ஈகோ இல்லை- அதிதி ராவ்

Loading

துல்கர் சல்மான், அதிதி ராவ், காஜல் அகர்வால் நடித்துள்ள படம், ஹே சினாமிகா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நேற்று திரைக்கு வந்துள்ளது. டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இயக்கியுள்ள முதல் படமான இதில் நடித்திருப்பது குறித்து அதிதி ராவ் கூறியதாவது:
பிருந்தா மாஸ்டர் இயக்கிய முதல் படத்தில் நானும், துல்கரும் கட்டாயம் நடிக்க வேண்டும் என்பதில் அவர் உறுதி யாக இருந்தார். நானும், துல்கரும் ஏற்கனவே நண்பர்கள் என்பதால் உடனே ஒப்புக்கொண்டேன். இப்படம் எனது நடிப்பு பயணத்தில் மறக்க முடியாத படமாக இருக்கும் என்பது எனது நம்பிக்கை.

காஜல் அனுபவம் வாய்ந்த நடிகை. சில காட்சிகளில் மட்டும் நாங்கள் இணைந்து நடித்தோம். எங்களுக்குள் ஈகோ கிடையாது. அனைவரிடமும் காஜல் எளிமையாக பழகினார். ஷூட்டிங்கில் ஒருநாள் புயலில் சிக்கித் தவித்தோம். இதனால் நான் பயந்து போய் அழுததை கிண்டல் செய்த துல்கர், அதை போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.

0Shares

Leave a Reply