திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவிப்பு
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.
இருப்பினும் ஆட்சி அமைத்து ஒரு வருடங்கள் ஆகியும் இது குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. இதனால் குடும்பத் தலைவிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் வருகின்ற 19-ஆம் தேதி அன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது மகளிருக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். தேர்தல் வாக்குறுதியின்படி மகளிருக்கான ஊக்கத்தொகை கட்டாயம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.