தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த காட்டம்பட்டி கிராமத்தில் ஒன்பதாம் ஆண்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருவிழா நடைபெற்றது
பாலக்கோடு.ஜன.18-

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த காட்டம்பட்டி கிராமத்தில் ஒன்பதாம் ஆண்டு
ஸ்ரீ முத்துமாரியம்மன் திருவிழா நடைபெற்றது. இது பங்காளிகள் இணைந்து நடத்தும் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம்.கொரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழக அரசாங்கம் அறிவித்த படி சமூக இடைவெளி முக கவசம் கடைப்பிடித்து விழா கொண்டாடப்பட்டது. காலையில் அம்மனுக்கு பால் தயிர் பன்னீர் மூலம் அபிஷேகங்கள் நடைபெற்றது. பிறகு ஸ்ரீ முத்து மாரியம்மனுக்கு பூ அலங்காரம் செய்யப்பட்ட பிறகு அம்மன் பக்தர்களுக்கு சிறப்பு காட்சி அளித்தார். வந்திருந்த பக்தர்கள் அம்மனுக்கு பஞ்சாமிர்தம் புளியோதரை சர்க்கரைப் பொங்கல் அபிஷேகம் போன்றவை படையலிட்டு சாமியை வழிபட்டனர். பக்தர்கள் ஊர் பொதுமக்கள் சமூக இடைவெளியும் முகக் கவசம் அணிந்து ஸ்ரீ முத்துமாரியம்மன் வழிபட்டுச் சென்றனர்.