அரசு மருத்துக்கல்லூரியை மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
அரியலூர் மாவட்டம்
புதிய அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை கட்டிடத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில், மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு கலைக்கல்லூரி அருகில் ரூ.347 கோடி மதிப்பில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டிடத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில், மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள், காணொலிக்காட்சி வாயிலாக இன்று (12.01.2022) திறந்து வைத்தார்.
இந்நேரலையில், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புதிய கட்டடத்தில் மாண்புமிகு பிறப்டுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் கலந்துகொண்டு, பின்னர், குத்துவிளக்கேற்றி வைத்து, பார்வையிட்டார்.
இந்த நேரலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் நகரில் 26 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.347 கோடி மதிப்பீட்டில் 700 படுக்கைகளுடன் கூடிய அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்ற வந்தன.
அதன்படி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில், மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள், 9 இலட்சத்து 63 ஆயிரத்து 192 சதுரஅடி பரப்பளவில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மாணவர்கள் தங்கும் விடுதி உள்ளிட்ட கட்டிடங்களை காணொலிக்காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.
இதில், மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.195 கோடி நிதியும், தமிழ்நாடு அரசின் பங்களப்பாக ரூ.130 கோடி நிதியுடன், கட்டிடம் கட்டுவதற்காக கூடுதலாக ரூ.22 கோடி நிதியும் வழங்கப்பட்டது. ரூ.102 கோடியே 55 இலட்சம் மதிப்பில் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடங்களும், ரூ.125 கோடியே 25 இலட்சம் மதிப்பில் மருத்துவமனை கட்டிடங்களும், 119 கோடியே 20 இலட்சம் மதிப்பில் குடியிருப்பு மற்றும் விடுதிக் கட்டிடங்களும் கட்டப்பட்டது.
இந்த மருத்துவக்கல்லூரியில் 150 மாணவர்கள் மருத்துவப்படிப்பு சேர்க்க நடைபெறவுள்ளது. இதற்கான அனுமதியை புது டில்லியில் உள்ள தேசிய மருத்துவ ஆணையத்தால் வழங்கப்பட்டு, மேலும், மிக விரைவிலேயே லேப் டெக்னிசியன், எக்;ஸ்-ரே டெக்னிசியன், அறுவை அரங்கு டெக்னிசியன் முதலான துணை மருத்துவப் படிப்புகள் துவங்க அரசு அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் செவிலியர் பயிற்சிப் பள்ளி, மருத்துவ பட்ட மேற்படிப்பு (MD, MS) உள்ளிட்ட உயர் மருத்துவக் கல்வி மையமாகவும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் பொ.சந்திரசேகர், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.முத்துகிருஷ்ணன், தலைமைப் பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் மருத்துவர்கள், பொதுமக்கள் உட்படப பலர் கலந்துகொண்டனர்.