விஜய்யின் தளபதி 66… ஷுட்டிங் துவங்கும் முன் ரிலீஸ் அப்டேட்… தயாரிப்பாளர் செம ஷார்ப் போல

Loading

சென்னை : விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

பீஸ்ட் படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏப்ரல் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

Thalapathy Vijay & Nayanthara ரசிகர்களுக்கு காத்திருக்கும் Surprise | Anirudh சம்பவம் | Beast l

பீஸ்ட் படத்தின் ஷுட்டிங் முடிப்பதற்கு முன்பே விஜய்யின் அடுத்த படமான தளபதி 66 படம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த படத்தை பிரபல தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிபல்லி இயக்க போவதாகவும், தயாரிப்பாளர் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்க போவதாகவும் அறிவிக்கப்பட்டது.

படத்தை அறிவித்ததோடு மட்டும் நிற்காமல் தொடர்ந்து அப்டேட்களும் வெளியிடப்பட்டது. தளபதி 66 படத்திற்காக விஜய்க்கு ரூ.125 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும், விஜய்யின் முதல் பைலிங்குவல் மற்றும் முதல் தெலுங்கு படமாக தளபதி 66 படம் உருவாக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் இந்த படத்தை இப்போதே கொண்டாட துவங்கி விட்டனர்.

மறுத்த கீர்த்த சுரேஷ் தளபதி 66 படத்திற்கு டி.இமான் இசையமைக்க உள்ளதாகவும், பிரகாஷ்ராஜ் முக்கிய ரோலில் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. விஜய்யின் மகளாக தெலுங்கு சூப்பர் ஹீரோ மகேஷ்பாபுவின் மகள் சித்தாரா நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இதே போல் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இந்த தகவலை கீர்த்தி சுரேஷ் மறுத்துள்ளார்.

ஷுட்டிங் எப்போ துவக்கம்

இதனால் தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா, கியாரா அத்வானி போன்ற பான் இந்தியன் நடிகைகளின் பெயர்கள் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் படத்தின் ஷுட்டிங் துவங்கப்படும் என கூறப்பட்டது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் பற்றிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.

அதுக்குள்ள ரிலீஸ் அப்டேட்

2022 ம் ஆண்டு தீபாவளிக்கு தளபதி 66 வெளியிடப்படும் என தகவல் வெளியாகி வந்தது. ஆனால் அது உறுதி இல்லையாம். படக்குழுவின் முதல் சாய்ஸ் தீபாவளியாக தான் உள்ளதாம். அதே சமயம் கொரோனா பெருந்தொற்று காரணமாக அது முடியாமல் போனால், 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு தளபதி 66 படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்.

செம ஸ்மார்ட் முடிவு

2021 ம் ஆண்டு பொங்கலுக்கு மாஸ்டர் படம் ரிலீஸ் செய்யப்பட்டதை போல் 2023 பொங்கலுக்கு தளபதி 66 படத்தை ரிலீஸ் செய்ய போகிறார்களாம். இந்த தகவல் வெளியானதும் கொரோனா பரவல் ஓயாமல் தொடர்ந்து வருவதை கருத்தில் கொண்டு தயாரிப்பாளர் எடுத்துள்ள இந்த ஸ்மார்ட் முடிவை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

 

 

0Shares

Leave a Reply