தெடாவூரில் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

Loading

தம்மம்பட்டி: சேலம் மாவட்டம் தம்மம்பட்டி வனச்சரகர் சந்திரசேகர் தலைமையிலான வனக்காப்பாளர் நாராயணசாமி, கந்தசாமி உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர் தெடாவூர் பகுதியில் இரவு நேர ஊரடங்கையொட்டி வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

 

அப்போது அவ்வழியாக ஆத்தூரில் இருந்து தெடாவூர் நோக்கி வந்த பிக்கப் வேனை நிறுத்தி சோதனை செய்ய முயன்றுள்ளனர். அப்போது அந்த வாகனம் ரோந்து பணியில் இருந்த வனத்துறையினர் மீது மோதவிடுவது போல் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

சினிமா பாணி போல் வனத்துறையினர் அந்த வாகனத்தை துரத்திச் சென்றுள்ளனர். இதையறிந்த வேன் ஓட்டுநர் மறைவான காட்டுப் பகுதிக்குச் சென்று பிக்கப் வேனை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

வாகனத்தைப் பிடித்து வனத்துறையினர் சோதனை செய்ததில் சுமார் 10 இலட்ச ரூபாய் மதிப்பிலான 40 பண்டல்களில் குட்கா போதைப் பொருள்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து குட்காவுடன் வேனை பறிமுதல் செய்த வனத்துறையினர் கெங்கவல்லி காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து கெங்கவல்லி காவலர்கள் விசாரணை மேற்கொண்டதில் இரவு நேர ஊரடங்கை பயன்படுத்தி சட்டவிரோத கும்பல்கள் குட்கா போதை பொருள்களை கடத்திச் சென்று நேரடியாகவே மளிகை கடைகளில் டோர் டெலிவரி செய்து வருவது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து வழக்கு பதிவு செய்த காவலர்கள், தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர், இரவு நேர ரோந்து பணியின் போது துணிச்சலாக குட்கா கடத்தி வந்த வேனை மடக்கி பிடித்த வனத்துறையினரை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *