விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுக்கா அறிவித்து 6- ஆண்டுகள்
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுக்கா அறிவித்து 6-
ஆண்டுகள் ஆகியும் தாலுகா அலுவலகத்தை தவிர வேறு எந்த அடிப்படை வசதிகள் இல்லாததால் அனைத்து கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர் அமைப்புகள் மகளிர், விவசாயிகள், வாலிபர்கள், மாணவர்கள், ஓட்டுனர்கள், அமைப்புகள் சார்பில் கடந்த 01/092021 அன்று கட்சி மற்றும் அமைப்புகள் சார்பில் தனியார் சமுதாயக் கூடத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி 20 கட்சி மற்றும் அமைப்புகளை சேர்த்து கண்டாச்சிபுரம் தாலுக்கா வளர்ச்சி குழுவாக உருவாக்கி
06/09/ 2021 திங்கள்கிழமை கண்டாச்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் கையெழுத்துப் பெற்ற மனுக்களை கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கொடுக்கப்பட்டது.
1-அரசு நீதிமன்ற வளாகம் அமைத்திட 2-தாலுகா கோட்டாட்சியர் அலுவலகம் அமைத்திட
3-கண்டாச்சிபுரம் குறுவட்டம் ஆக பிரித்து அலுவலகத்தை உருவாக்கிட 4-கண்டாச்சிபுரம் பேரூராட்சியாக தரம் உயர்த்திட
5-அரசு தாலுகா மருத்துவமனை உடனடியாக அமைத்திட
6-தாலுக்கா உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அமைத்திட
7-மகளிர் காவல் நிலையம் உடனடியாக அமைத்திட
8-தாலுகா (சப் ஜெயில்) கிளை சிறைச் சாலை அமைத்திட
9-ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைத்திட
10-வேளாண்மை துறை அலுவலகம் அமைத்திட
11-சார்பதிவாளர் அலுவலகம் அமைத்திட
12-தீயணைப்பு நிலையம் அமைத்திட 13-மாவட்ட கல்வி அலுவலகம் உடனடியாக அமைத்திட
14-கருவூலம் உடனடியாக அமைத்திட 15-பாரத ஸ்டேட் வங்கி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உடனடியாக அமைத்திட
16-கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைத்திட
17-நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் அமைத்திட
18-தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் அமைத்திட
19-தாலுக்கா தலைநகரத்தில் தொழிற்சாலைகள் உருவாக்கிட 20-விழுப்புரம் டு திருவண்ணாமலை மெயின் ரோட்டில் கண்டாச்சிபுரம் அருகில் புறவழிச் சாலை அமைத்திட 21-செஞ்சி ஒன்றியம் காணை ஒன்றியத்திலுள்ள அன்னியூர் பிர்காவில் உள்ள சில கிராமங்களை கண்டாச்சிபுரம் வருவாய் வட்டத்தில் இணைத்திட வலியுறுத்தி இன்று 150க்கும் மேற்பட்ட நபர்களால் மனுக்கள் கொடுக்கப்பட்டது மேலும் கண்டாச்சிபுரம் வளர்ச்சி குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.கணபதி தலைமையில்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எம்,பாபு எம்,ஸ்ரீதர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எம்,முருகன் வி.ராஜி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஏ,சக்திவேல் ஆட்டோஆறுமுகம் வி.ராஜவேல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் M.ரகோத்தமன் எஸ் மதியழகன்
ஜி,கலா தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் கே முருகன்
எஸ்,ரமணா இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்.சேட்டு எஸ்.பக்தவச்சலம் விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பில்
என். கண்ணாயிரம் எம் முருகன் கானை ஒன்றியம் எம் ஆசைத்தம்பி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எஸ் ஹக்கீம் .எம் உதுமான்அலி சமூக ஆர்வலர்கள் VR. ரஜினி
வி.முருகானந்தம் வா உ சிதம்பரனார் அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் R.ஜூலியஸ தங்கராஜ் வி ஆர் சந்திரசேகர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் இ.சிலம்பரசன் எம்முருகனன் ஊராட்சி மகளிர் கூட்டமைப்பு சார்பில் கே விசாலாட்சி P.ராஜேஸ்வரி
கே ராணி மனோரஞ்சிதம் மல்லிகா மற்றும் கவிதா ஐயப்பாசேவா சங்கம் சார்பில் சோமசுந்தரம் எ.சுந்தர் மற்றும் தோழர்கள் திருவாளர்கள் 150க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனுக்கள் வழங்கப்பட்டது