காரைக்குடியில் *அரசு சட்டக் கல்லூரி அமைக்க இருப்பதாகக்கூறிய முதல்வருக்கு நன்றி* _மத்திய மேனாள் அமைச்சர் ப.சிதம்பரம்.
காரைக்குடி செப்டம்பர் 11
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம்,
“திருப்பத்தூர் தொகுதி செட்டிநாடு பகுதியில் அரசு வேளாண் கல்லூரி அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கும்,
கல்வி நகரான காரைக்குடியில் அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும் என்றும் அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.
இதற்கு உறுதுணையாக இருந்த வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்தார்.
கண்டனூரில் கடந்த 10 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த கதர் கிராமத் தொழில்கள் மையத்தை ரூ.47 இலட்சம் செலவில் புதுப்பித்து செயல்படத்தொடங்கி பல நூறு பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் முறையிலே செய்து தருவோம் என்று கூறியிருக்கும் கதர் கிராம தொழில் அமைச்சர் காந்திக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
திமுக தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருவது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
தமிழக அரசின் 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தபிறகு இவ்வளவு நிதி நெருக்கடியிலும் தன்னுடைய வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றிவரும் முதல்வர் ஸ்டாலினை பாராட்டுவதாக கூறினார். இந்த ஆட்சி மக்களுக்கு எல்லா வகையிலும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்திவருவதாகவும் கூறினார்.