சூதாட்டக் கும்பலை சுற்றி வளைத்த காவல் ஆய்வாளர்
![]()
ஈரோடு ஜூலை 14
ஈரோட்டில் தொடர் நடவடிக்கையாக குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை தீவிரமாக கண்காணித்து கைது வட்டத்திற்குள் கொண்டு வந்து குற்றம் செய்பவர்கள் மீது பாரபட்சமின்றி போலீசார் செயல்படுகின்றனர்
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி சசிமோகன் ஐ.பி.எஸ்., உத்தரவின் பேரில், நகர காவல் துணை கண்காணிப்பாளர் ராஜு ஆலோசனையின் படி கருங்கல்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் , கோபிநாத் தலைமையில் கிடைத்த ரகசிய தகவலின் படி கே.ஏ.எஸ். நகர் பம்பிங் ஹவுஸ் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் அப்போது அங்கு சூதாடிய 10 நபர்களை சுற்றி வளைத்தனர், அப்போது ரூ 13,250 ரொக்கமும், 6 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து 10 நபர்களையும் கைது செய்தனர் தொடர்ந்து கருங்கல்பாளையம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும் அதிரடி சோதனை நடத்தி ரகசியமாக கடத்திவரப்படும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளிகளை சிறைக்கு அனுப்பி வருகிறார்கள் பொதுமக்களும்,சமூக ஆர்வலர்களும்,அரசியல் பிரமுகர்களும் இச்செயலுக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

