வரிசெலுத்துவோர் பணத்தை முறையாகப் பயன்படுத்தும் குறிப்பிட்ட இலக்கு பிரிவினருக்கான உதவித் திட்டங்கள் டாக்டர் கே.வி. சுப்ரமணியன்

Loading

நிதியமைச்சர் திங்கட்கிழமை அறிவித்த நிதி உதவித் திட்டங்களில்
மிக முக்கியமான திட்டம் எதுவென்றால் நகரப் பகுதி ஏழைகளுக்கு
கடன் வழங்குவதற்காக நுண்நிதி நிறுவனங்களுக்கு (MFIs) மானியம்
அளிக்கும் வகையிலான கடன் உத்திரவாதத் திட்டம் ஆகும்.

டாக்டர் கே.வி. சுப்ரமணியன்

பெருந்தொற்றுப் பரவலினாலும் அதைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட
பொருளாதாரக் கட்டுப்பாடுகளாலும் நகர்ப்புற ஏழைகள் மன
அழுத்தத்துக்கு உள்ளானார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.
அவர்களது மன அழுத்தத்தை நீக்கும் வகையில் நகரப் பகுதிகளில்
வேலை உத்திரவாதத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று
பல விமர்சகர்களும் பரிந்துரைத்து உள்ளனர்.

இந்தப்பரிந்துரையானது மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித்
திட்டம் (MNREGA) என்ற கிராமப்புற வேலை வாய்ப்புஉறுதித்திட்டத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டு உள்ளது.எதிர்பாராத பெருந்தொற்றுப் பரவல் காலத்தில் ஊரகப் பகுதி
மக்களின் மனநெருக்கடியை நீக்குவதில் எம்.என்.ஆர்.இ.ஜி.ஏ மிக
உதவியாக இருந்தது.

அதே சமயம் சாதாரண காலகட்டத்தில் ஈட்டித்
தரும் நிரந்தர வருமானத்தின் போதாமைகளை நாம் மறந்து
விடக்கூடாது. எம்.என்.ஆர்.இ.ஜி.ஏ குறித்த விரிவான ஆய்வுகளானது
அத்தகைய போதாமைகளுக்கு சாட்சியங்களை வழங்குகின்றன.
குடியரசு கொள்கையின்படி எம்.என்.ஆர்.இ.ஜி.ஏ, தேசிய உணவு
பாதுகாப்புச் சட்டம் முதலானவை உருவாக்கித் தரும் வருவாயை
எளிதில் நிறுத்திவிட முடியாது. நகரப்பகுதி வேலைவாய்ப்பு உறுதி
திட்டமும்கூட அதேவிதமான பாதிப்பை அடையக் கூடும்.
இரண்டாவது, நகரப் பகுதிகளுக்கு ஊரக எம்.என்.ஆர்.இ.ஜி.ஏ
திட்டத்தை அப்படியே பிரதியெடுப்பது என்பது பல சவால்களை
ஏற்படுத்தும். இதற்கு காரணம் ஊரக வேலைவாய்ப்புக்கும் நகர
வேலைவாய்ப்புக்கும் இடையில் உள்ள முக்கிய வேறுபாடுகளேஆகும்.

ஊரக வேலைவாய்ப்பு என்பது பருவநிலை சார்ந்தது. நகர
வேலைவாய்ப்பு பருவநிலைக்கு அப்பாற்பட்டது. ஊரக
எம்.என்.ஆர்.இ.ஜி.ஏ-வில் அனைவருக்கும் ஒரேவிதமான கூலி
தரப்படும். ஆனால் நகரப் பகுதிகளில் தொழில்திறன் நிலை
வேறுபடுவதால் அனைவருக்கும் ஒரே கூலி என்பது
நடைமுறைக்குப் பொருந்தாது.

மூன்றாவது, நகரப் பகுதி வேலை வாய்ப்பு உறுதி திட்டமானது
நகரப் பகுதிகளை நோக்கி இடம் பெயர்தலை அதிகரிக்கச் செய்யும்.
இது திட்டத்தின் உள்நோக்கம் சாராத விளைவாக இருக்கும்.
வாழ்க்கைக்கான செலவு ஊரக மற்றும் நகரப் பகுதிகளில்
வித்தியாசமாக இருக்கும் போது, நகரப் பகுதி வேலை வாய்ப்பு
திட்டத்தில் கூலி என்பது கிராமப் பகுதியை விட அதிகமாக
இருந்தாக வேண்டும். இந்தக் கூலி வித்தியாசம் நகரத்தை நோக்கிய
இடம் பெயர்தலை அதிகரிக்கும்.

தற்போதைய நோக்கத்திற்கு முரண்பாடாக, நிபந்தனையற்ற இடர்
உதவி என்பது பெரும்பாலும் நெருக்கடிக்கு ஆளானவர்களுக்கு
உதவுவதாக இருப்பதில்லை. அதாவது நிர்ணயிக்கப்படும் இலக்கு
மோசமானதாகி விடுகிறது. உதாரணமாக 2009ல் அறிவிக்கப்பட்ட
விவசாயக் கடன் தள்ளுபடியைக் குறிப்பிடலாம்.

நிதி சார்ந்தஆதாரங்கள் செலவழிக்கப்படும் போது, பொருளாதாரத்தின்மீதான
அதன் பலன் குறைவாக இருக்கிறது. காரணம் பல்பெருக்க விளைவு
குறைவாக இருப்பதுவே ஆகும். இதற்கு மாறாக, நிதித்துறை
வழங்குகின்ற பல்வேறு பலன்களைப் பயன்படுத்தி கொண்டு
வரப்படும் நிதிசார் இடையீட்டுத் திட்டம் என்பது நிபந்தனையற்ற
நிதிப் பரிமாற்றத்தைக் காட்டிலும் உள்ளார்ந்து அதிகத் திறன்
கொண்டதாக இருக்கிறது.

நகர மற்றும் ஓரளவு நகரப் பகுதிகளில் நுண்நிதி அமைப்புகளில்
இருந்து 2 கோடிக்கும் அதிகமானோர் கடன் பெற்று உள்ளனர் என
நிதி அமைச்சகத்தில் இருந்து கிடைக்கும் தரவுகளானது
எடுத்துக்காட்டுகின்றன. அதாவது நுண்நிதி அமைப்புகள் நகரப்பகுதி
ஏழைகளைப் பெரிதும் சென்றடைந்து உள்ளன. நுண்நிதி

அமைப்புகள் கடன் பெற்றவர்கள் குறித்து தெரிந்து வைத்துக்
கொண்டு அவர்களை அணுகவும் நகர ஏழைகளுக்குச் சேவை
ஆற்றக்கூடியதுமான ஒரு வர்த்தக மாதிரியை கடைப்பிடிக்கின்றன.
நகரப் பகுதி ஏழைகள் பெரும்பாலும் மற்ற மாநிலங்களில் இருந்து
இடம் பெயர்ந்து வந்தவர்களாக இருப்பதால், நகரப் பகுதி ஏழைகள்
குறித்த மிகத் தரமான தரவு கிடைப்பதில்லை. எனவேதான் இலக்கு
நிர்ணயிக்கப்பட்ட பணப் பரிமாற்றத் திட்டத்தை மேற்கொள்ள
முடிவது இல்லை. எனினும், எம்.எஃப்.ஐ கடன் கொடுத்து, அதற்கு
அரசு முழு உத்திரவாதம் அளித்தால், நியாயமாக நெருக்கடியில்
இருக்கும் இலக்கு ஏழைகளுக்கு பாதி அளவு நிதிப் பரிமாற்ற சேவை
அளிக்கும் திட்டமாக இருக்கும். தற்காலிகமாக நெருக்கடியில்
இருப்பவர்களுக்கு பணப்புழக்க உதவியாகவும் இது இருக்கும்.
ஏன்? கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் பட்டியலை எம்.எஃப்.ஐ
பராமரிப்பது போல, கடனைத் திருப்பிச் செலுத்தாவிட்டால் அது
கடன் வாங்கியவருக்கு நேரடியாகவும் மறைமுகமாவும் செலவை
ஏற்படுத்தும் என்பதும் கடனாளிகளுக்குத் தெரியும். உதாரணமாக,
2009ஆம் ஆண்டின் விவசாயக் கடன் தள்ளுபடிக்குப் பிறகும் கூட,
கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களுக்கு வங்கிகள் கடன்
வழங்குவதைக் குறைத்துக் கொண்டதை உதாரணமாக
எடுத்துக்காட்டலாம். அத்தகைய செலவுகள் இருக்கும் சூழலில்,
நியாயமான நெருக்கடியில் உள்ள ஒரு கடன் வாங்கியவர் அரசு
உத்திரவாதம் இருந்த போதிலும் கூட தனது கடனைத் திருப்பிச்
செலுத்த முடியாமல் போகலாம். எனவே, அத்தகைய கடனானது
கடன் வாங்குபவர்களை மூன்று வகையாகப் பிரிக்கிறது. முதலாவது
வகையினர் நெருக்கடியில் இல்லாத தனி நபர்கள். எனவே இவர்கள்
கடன் வாங்குவதால் பலன் இல்லை என நினைப்பவர்கள்.
இரண்டாவது வகையினர், பெருந்தொற்றுப் பரவல் காரணமாக
நெருக்கடியில் உள்ள கடன் தேவைப்படுவோர் ஆவர். இவர்கள்
கடனைத் திருப்பிச் செலுத்தும் போது நெருக்கடி நீங்கி இருப்பார்கள்.
இந்த வகையினர் இப்போது கடன் வாங்குவார்கள். ஆனால் தவணை
செலுத்தாத நிலைக்கான செலவுகளைப் பின்னர் திருப்பிச்
செலுத்துவார்கள். இறுதியாக மூன்றாவது வகையினர் இப்போது

நெருக்கடியில் இருக்கும் கடன் தேவைப்படுவோர். கடனைத்
திருப்பிச் செலுத்தும் காலகட்டம் வரும்போதுகூட அதே
நெருக்கடியிலேயே இருப்பார்கள். இந்த வகையைச் சேர்ந்த கடன்
பெறுவோர் கடனைப் பெற்றுக் கொள்வார்கள். ஆனால் திருப்பிக்
கடனை அடைக்க மாட்டார்கள்.

கடனைத் திருப்பிச் செலுத்தாத
நிலையில், கடன் என்பது பணப் பரிமாற்றமாகவே இருக்கிறது.
உத்திரவாதம் ஏதும் இல்லாவிட்டால், நுண்கடன் அமைப்புகள்
இரண்டாவது அல்லது மூன்றாவது வகை கடன்
தேவைப்படுவோருக்கு கடன் வழங்க முன்வராது. ஆனால்
உத்திரவாதம் இருந்தால், இரண்டாவது அல்லது மூன்றாவது வகை
கடன் தேவைப்படுவோருக்கு நுண்கடன் அமைப்புகள் கடன் வழங்கத்
தயங்காது.

இந்த விளக்கமானது உத்திரவாதத்துடன் கூடிய கடன்
என்பது நியாயமாக நெருக்கடியில் உள்ளவர்களுக்கு பாதியளவு
பணப் பரிமாற்றமாக இருக்கும். தற்காலிக நெருக்கடியில்
இருப்பவர்களுக்கு பணப்புழக்க உதவியாக இருக்கும். அதேசமயம்,
நெருக்கடி இல்லாதவர்கள் கடன் வாங்க மாட்டார்கள். எனவே
இயல்பாகவே அவர்கள் கடன் வாங்குவோர் பட்டியலில் இருந்து
நீக்கப்பட்டு விடுவார்கள். கடனைத் திருப்பிச் செலுத்தாமல்
இருப்பதால் ஏற்படும் நஷ்டமே இந்தப் பிரிவினையை
உருவாக்குவதில் முக்கியமானதாக உள்ளது. அத்தகைய நஷ்டம்
இல்லாவிட்டால் அத்தகைய பிரிவினை உருவாகாது.

நிதித்துறையுடன் கூட்டாக செயல்படுவதால்தான் இத்தகைய நஷ்டச்
செலவுகள் சுமத்தப்படுகின்றன என்பதால், அத்தகைய திட்ட
வடிவமைப்பு நியாயமாக தேவைப்படுவோரை இலக்காக கொண்டு
உதவுகிறது. உண்மையில் சிபில் அமைப்பின் அண்மைக்கால
ஆராய்ச்சியின்படி அவசரக்கால கடன் உத்திரவாத திட்டம் இந்த
வடிவமைப்பின் பலனை விளக்குகிறது.

நிதித்துறை வழங்குகின்ற நிதிசார் உந்து சக்தியானது நெருக்கடியில்
உள்ளவர்களுக்கு தரப்படும் உதவியின் அளவை அதிகரிக்க
உதவுகிறது. இந்தக் குறிப்பிட்ட திட்டம் ரூ.1.25 லட்சம் வரை
கடன்களை வழங்குகிறது. இத்தகைய குறிப்பிடத்தக்க அளவு
தொகைக்கான உதவி என்பது நேரடி பணப் பரிமாற்றம் மூலம்

கிடைக்காது. நிறைவாக, அரசு தரும் உத்திரவாதங்கள் செலவின
பொறுப்புகளை உருவாக்குகின்றன. பொருளாதார நிலைமை பின்னர்
நல்ல நிலைமைக்கு சீரானப் பிறகு எதிர்காலத்தில் கடனைத்
திரும்பச் செலுத்தக் கோரப்படும்.
சுருக்கமாகச் சொல்வதென்றால், அரசின் உத்திரவாதம் உதவி
தேவைப்படுவோரை சரியான இலக்காக நிர்ணயித்து இடையீடு
செய்ய உதவுகிறது. அதனால் வரி செலுத்துவோரின் பணம்
புத்திசாலித்தனமாக சரியாகப் பயன்படுத்தப்படும். வரி செலுத்துவோர்
பணத்தை ஒருவரின் சொந்தப் பணம் போன்று கருதி கௌரவமாகச்
செலவழிப்பது என்பது கொள்கை உருவாக்கும் எவர் ஒருவரின்
நம்பக பொறுப்புடைமைக்கும் முக்கியமானது ஆகும்.

கட்டுரை ஆசிரியர் நிதி அமைச்சகத்தின் முதன்மை பொருளாதார
ஆலோசகர் ஆவார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *