குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தனது பிள்ளைகளுடன் பாதிக்கப்பட்ட பெண் புகார் மனு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது

Loading

குற்ற வழக்கில் எதிரி அரசு வேலை பார்ப்பதால் சிறப்பு உதவியாளரும், காவல் ஆய்வாளரும் எதிரியை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுப்பட்டதாக குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தனது பிள்ளைகளுடன் பாதிக்கப்பட்ட பெண் புகார் மனு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் காவல் நிலையத்திற்குப்பட்ட வடலி விளை ஊரை சேர்ந்தவர் சதீஷ், இவரது மனைவி ரேகா இவர் இன்று தனது பிள்ளைகளுடன் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணனிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிறுப்பதாவது

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு (11-5- 2019) எங்கள் ஊர் திருவிழா முடிந்து மதியம் நாங்கள் வீட்டில் இருந்த போது வணிகவரி அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்க்கும் எதிரி சிவபிரகாஷ் தலைமையில் 7பேர் கொண்ட கும்பல்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து எனது கணவர் சதீஷ் மனைவி ரேகாவை அடித்து உதைத்து காயப்படுத்திவிட்டு தப்பி சென்று விட்டனர், மேற்படி காயப்பட்ட ரேகாவை மீட்டு குமரி அரச மருத்துவக் கல்லூரியில் சிகிக்சைக்கு சேர்த்தனர். அப்போது கோட்டார் காவல் நிலைய சிறப்பு ஆய்வாளர் அந்தோணி வாக்குமூலம் வாங்க வந்தார். மேற்படி நான் கொடுத்த விபரங்களை பதிவு செய்தார் அதில் அரசு வேலை பார்க்கும் எதிரி சிவபிரகாஷ் உள்பட 7 எதிரிகளின் பெயர் இருந்தது.மேற்படி
முதல் தகவல் அறிக்கையில் 2-வது எதிரியின் பெயர் வரவில்லை பின்னர் நாங்கள் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்ட புகார் மனுவை நகல் எடுத்து பார்த்த போது எனது வாக்குமூலத்தில் எதிரி சிவபிரகாஷின் பெயரில் ஒயிட்னர் போட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தோம்.
கோட்டார் காவல் நிலைய ஆய்வாளர் அன்பு பிரகாஷ் உத்தரவின் பேரில் சிறப்பு உதவி ஆய்வாளர் அந்தோணி ஆகியோர் எதிரியிடம் பல லட்சம் ரூபாய் கையூட்டு பெற்று கொண்டு எதிரியை காப்பாற்றி உள்ளதாகவும் இது சம்மந்தமாக ஏஎஸ்பிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை மாறாக இந்த வழக்கில் விசாரனை அதிகாரி காவல் ஆய்வாளர் அன்பு பிரகாஷ் ஆவதால் எந்த நீதியும், நியாயமும் எங்களுக்கு கிடைக்கப் போவதில்லை. எனவே எங்களுக்கு நீதி கிடைக்க மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் நேர்மையான விசாரணை அதிகாரியை வைத்து புலன் விசாரனை செய்தால் மட்டுமே எனது கணவரை தாக்கிய அரசு வேலை பார்க்கும் சிவ பிரகாஷ்க்கும். வழக்கில் இருந்து பெயரை ஒயிட்னர் போட்டு அழித்த காவல் ஆய்வாளர் அன்பு பிரகாஷ் -க்கும், உதவி சிறப்பு ஆய்வாளர் அந்தோணிக்கும் உரிய தண்டனை கிடைக்கும் என அந்த மனுவில் தெரிவித்து உள்ளார், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0Shares

Leave a Reply