முழு ஊரடங்கு காரணமாக பொது மக்கள் வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Loading

திருவள்ளூர் ஜூன் 06 : கொரோனா தொற்று நோய் இரண்டாவது அலையை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதன் காரணமாக தொற்று நோய் படிப்படியாக குறைந்து வருகிறது. முழு ஊரடங்கு காரணமாக பொது மக்கள் வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருவள்ளூரை அடுத்த பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட இருளர் இன பகுதி மக்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக வாழ்வாதாரம் இன்றி அவதிப்பட்டு வந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் திருவள்ளூர் ஆர்.டி.ஓ ப்ரீத்தி பார்கவி அவர்களுக்கு உதவும் விதமாக திருவள்ளூரில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்தில் இருந்து 600 இருளர் இன மக்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை அவர்களின் கிராமங்களுக்கு இரண்டு வாகனங்களில் ஏற்றி அனுப்பினார். பின்னர் இருளர் இன மக்களுக்கு வாகனங்களில் வீடு வீடாக திருவள்ளூர் ஆர்.டி.ஓ நேரில் சென்று மளிகை தொகுப்புகளை வழங்கினார். ஊனமுற்றோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் என யாரும் சிரமப்படாமல் இருக்க அதிகாரிகள் மூலம் வீடுகளுக்கு நேரில் சென்று மளிகை தொகுப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் நிஷாந்தினி, மலர்விழி, தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர்கள் பழனி, ராஜேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply