திருவள்ளூர் மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் பயனாளிகளுக்கு ஆணைகள் : பால்வளத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வழங்கினர்

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் பயனாளிகளுக்கு ஆணைகள் : பால்வளத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வழங்கினர்

திருவள்ளூர் ஜூன் 04 : தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க திருவள்ளுர் மாவட்டம் ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை சார்பாக உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் பொதுமக்கள் வழங்கிய மனுக்களை பரிசீலித்து தீர்வு காணப்பட்டவர்களில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பொன்னையா ஆகியோர் 19 பயனாளிகளுக்கு முதிர்கன்னி உதவித்தொகை விதவை உதவித்தொகை முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகளை வழங்கினர்.

பால்வளத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முதலமைச்சர் கடந்த காலங்களில் பல்வேறு தொகுதிகளுக்கு சென்று மனுக்கள் பெற்றார்.
முதலமைச்சர் கடந்த 18.05.2021 அன்று தலைமைச் செயலகத்தில் மனுக்கள் தீர்வு நிகழ்வினை தொடங்கி வைத்தார். முதலமைச்சரின் கூற்றுக்கிணங்க சொல்வதை செய்வோம் செய்வதை தான் சொல்வோம் என்ற கூற்றுக்கிணங்க ஒவ்வொரு நாளும் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு பால் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைக்கப்பட்டுள்ளது சாதாரண நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயண சலுகை வழங்கப்பட்டது. அதுபோல கொரோனா நிவாரண நிதியாக ரூ. 4000 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்பதன் அடிப்படையில் முதல் தவணையாக ரூ. 2000 வழங்கப்பட்டு அடுத்த தவணை ரூ. 2000 வழங்கப்படவுள்ளது.

இதனை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் 17004 அவற்றில் online ல் இதுவரை பதிவு செய்யப்பட்டது 15959. இதில் தீர்வு காணப்பட்ட மனுக்கள் 459. இதனை தொடர்ந்து மீதமுள்ள மனுக்கள் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு மேல் நடவடிக்கைகளுக்கு அனுப்பி வைத்து 100 நாட்களில் தீர்வு காணப்பட்டு நலத்திட்டங்கள் வழங்கப்படும். இதுவரை
தீர்வு செய்யப்பட்டுள்ள மனுக்கள் 459. ஆவடி தொகுதிக்கு மொத்தம் 128 மனுக்கள் பெறப்பட்டு அதில் தீர்வு காணப்பட்ட 19 நபர்களின் மனுக்களுக்கு ஆணைகள் வழங்கப்பட்டது. இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அனைத்து மனுக்களுக்குமான தீர்வு எடுக்கப்படும். இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ஆவடி வட்டாட்சியர் செல்வம் தனி வட்டாட்சியர் மணிகண்டன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *