Today’s Rasi Palan: இன்றைய ராசி பலன்

Loading

Today’s Rasi Palan: இன்றைய ராசி பலன் சனிக்கிழமை மே 8, 2021 சென்னை:

பிலவ வருடம் சித்திரை 25ஆம் தேதி மே 08, 2021 சனிக்கிழமை. துவாதசி திதி மாலை 05.21 மணி வரை அதன் பின் திரயோதசி திதி. உத்திரட்டாதி பகல் 02.47மணி வரை அதன் பின் ரேவதி. சந்திரன் இன்றைய தினம் மீன ராசியில் பயணம் செய்கிறார். சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.
மேஷம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து முடிப்பீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். தொழிலில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும் சேமிப்பும் கூடும். குடும்பத்துடன் உற்சாகமாக பொழுதை கழிப்பீர்கள். பிள்ளைகளால் சந்தோஷம் உண்டாகும்.

ரிஷபம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உடல் நலமாக இருக்கும். பயணங்களால் சந்தோஷம் ஏற்படும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.

மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். உத்தியோகஸ்தர்கள் வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவார்கள். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பழைய கடன்கள் வசூலாகும். இன்று இல்லத்தில் பிள்ளைகள் பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்வார்கள்.

கடகம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகளால் மனதில் நிம்மதி ஏற்படும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் சந்திப்பு வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். பணவரவு சுமாராக இருக்கும். வீண் விரைய செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. இன்று நீங்கள் மன உளைச்சலுடன் காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். வீண் பேச்சுக்களை தவிர்த்து விடவும்.

கன்னி
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுடைய வீட்டில் பிள்ளைகளால் சுபசெலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகி வருமானம் பெருகும். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வேலை தேடுபவர்களுக்கு வெளியூரில் இருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

துலாம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். பிள்ளைகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தொழிலில் பணியாட்களின் ஒத்துழைப்போடு எதிர்பார்த்த லாபங்களை அடைவீர்கள். உறவினர்கள் வழியிலும் அனுகூலம் உண்டாகும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

விருச்சிகம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். சுபகாரிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உறவினர்கள் உதவியால் பொருளாதார நெருக்கடிகள் குறையும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். பயணங்களால் நன்மைகள் ஏற்படும். இன்று உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் சில பிரச்சினை வரலாம். பிள்ளைகளுக்கு மருத்துவ செலவுகள் செய்வீர்கள்.

தனுசு
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் எதிர்பாராத திடீர் விரயங்கள் ஏற்படலாம். மன நிம்மதி குறையும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

மகரம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் இருக்கும். பெண்கள் புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். கடன் பிரச்சினைகள் தீரும். வங்கி சேமிப்பு உயரும்.

கும்பம்
சந்திரன் இன்றைய தினம் இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி அடைய உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் திடீர் வருமானம் அதிகரிக்கும்.பிள்ளைகளால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

மீனம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்குள் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும் வெளியூர் பயணங்களைத் தவிர்த்து விடவும். சுப காரியம் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். வீட்டிற்கு விருந்தினர்கள் வருவார்கள். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும்.

0Shares

Leave a Reply