தலைவாசலில் போலி பத்திரம் தயாரித்து நில மோசடி 3 பேர் கைது

Loading

சேலம் மாவட்டம் தலைவாசல் பத்திரப் பதிவாளர் அலுவலகத்தில் தம்மம்பட்டி உடையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் வயது 45 இவருடைய மனைவி மலர் 43 இவர்களுக்கு இருவருக்கும் சொந்தமான நிலத்தை சரவணன் போலி பத்திரம் தயாரித்து தலைவாசல் பத்திரப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து விற்பனை செய்து உள்ளதாக அவரது மனைவிக்கு தகவல் கிடைத்தது மேலும் தகவல் கிடைத்த அதிர்ச்சி அடைந்த மலர் தனது கணவர் சரவணன் மற்றும் அவரது நண்பர்களான சின்ன சேலத்தை சேர்ந்த சதீஷ்குமார் கலைமணி ஏத்தாப்பூர் பூபதி தலைவாசலை சேர்ந்த பாஷாகான் ஆகியோர் போலி பத்திரம் தயாரித்து நில மோசடி செய்து விட்டதாக சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கணிக்க புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் விசாரணை செய்ததில் சரவணன் மற்றும் அவரது நண்பர்கள் போலி பத்திரம் தயாரித்து நில மோசடி செய்து தெரியவந்தது இதையே தொடர்ந்து சரவணன் மற்றும் அவரது நண்பர் 4 பேர் மீது தலைவாசல் போலீசார் நில மோசடி வழக்கு பதிவு செய்தனர் மேலும் இந்த வழக்கு தொடர்பாக சரவணன்-45 ,சதீஷ்குமார் வயது – 32, பூபதி- 33 ஆகிய 3 பேரையும் தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் கைது செய்தார் .தலைமறைவான கலைமணி ,பாஷாகான் ஆகியோர் போலீசார் தேடி வருகின்றனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *