திருச்சி தூய வளனார் கல்லூரியில் மாணவர் கருத்தரங்கம்…
திருச்சி தூய வளனார் கல்லூரியில் மாணவர் கருத்தரங்கம்
திருச்சி தூயவளனார் கல்லூரித் தமிழாய்வுத்துறை சார்பில்
தமிழிலக்கியத்தில் உடல்நலம் குறித்த பதிவுகள் என்கிற மையப்பொருளில்
மாணவர் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன்
இக்கருத்தரங்கம் தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் இயலறிவியல்
புலத்தலைவர் ஆ.நெ.பால்ஆஞ்சிலோ தலைமை வகித்தார். விழாவில்
தமிழாய்வுத்துறைத்தலைவர் முனைவர்.ஞா.பெஸ்கி வரவேற்புரையாற்றினார்.
பணிமுறை இரண்டு தமிழ்த்துறையின் ஒருங்கிணைப்பாளர் முனைவர்.
சி.ஆரோக்கியதன்ராஜ் முன்னிலை வகித்தார்.கல்லூரி முதல்வர் அருள்தந்தை
ம.ஆரோக்கியசாமி சேவியர் வாழ்த்துரை வழங்கினார். புதிய ஆய்வுத்தளத்தில்
நிகழ்த்தப்படுகிற இக்கருத்தரங்கில் வாசிக்கப்படும் சிறந்த கட்டுரைக்கு
கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்னும்
அறிவிப்பை வெளியிட்டார்.உருமு தனலெட்சுமி கல்லூரி முதல்வர்
முனைவர். இ.ஆர்.இரவிச்சந்திரன் சிறப்புரையாற்றினார்.முனைவர்.செ.கென்னடி
தலைமையில் நடைபெறுகின்ற அமர்வில் தமிழிலக்கியம் சார்ந்து வெவ்வேறு
தலைப்புகளில் ஆய்வாளர்கள் தங்கள் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். கட்டுரை
வழங்கும் ஆய்வாளர்களுக்குப் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பேராசிரியர் இரா.முரளிக்கிருஷ்ணன் நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்.
இக்கருத்தரங்கில் இளங்கலை,முதுகலைத் தமிழ் மாணவர்கள், பேராசிரியர்கள்,
தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.நிறைவில் கருத்தரங்க
ஒருங்கிணைப்பாளர் முனைவர். ஆ.ஜோசப் சகாயராஜ் நன்றியுரையாற்றினார்.