மாணவர்களிடம் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உணவு சமைத்தல் போட்டி கல்லூரி முதல்வர் திரு.கே.ஹரிக்குமார் அவர்களின் முன்னிலையில் நடத்தப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகாவில்
மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆணைக்கிணங்க,
மதிப்புமிகு விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்அவர்களின் வழிகாட்டலின் படியும்
செஞ்சி மாவட்டக் கல்வி அலுவலர் திருமதி.எஸ்.அமுதா அவர்களின் ஆலோசனையின்படி,
அண்ணமங்கலம், சங்கமம் கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்களிடம்
தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உணவு சமைத்தல் போட்டி
கல்லூரி முதல்வர் திரு.கே.ஹரிக்குமார் அவர்களின் முன்னிலையில் நடத்தப்பட்டது.
வாக்குப் பதிவு இயந்திரத்தின் மூலம் மாதிரி வாக்குப்பதிவிற்கான செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் 100% வாக்களிக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது.
விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கப்பட்டன.
தேர்தல் விழிப்புணர்வு பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது.
கல்லூரி மாணவர்களைக்கொண்டு 1950 எண் வடிவில் நிற்க வைத்து, தேர்தல் உதவி எண் குறித்து விளக்கம் அளிக்கபட்டது.இந்நிகழ்வை சாரணர் இயக்க செயலாளர் திரு.தே.பாலமுருகன் ஒருங்கிணைத்தார்.பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் திரு.பாலசுப்பிரமணியன்,
நாட்டு நலப்பணித்திட்டம் ஆசிரியர் திரு.செந்தில்வேலன்
JRC ஒருங்கிணைப்பாளர் திரு.நடராஜன்,NCC ஒருங்கிணைப்பாளர் திரு.குமரவேல்,
பள்ளித் துணை ஆய்வாளர் திரு.விநாயகமூர்த்தி, மற்றும்
கல்லூரி பேராசியர்களும், மாணவ-மாணவியர் திரளாகக் கலந்துகொண்டனர்.
திரு.G.D.ஆல்பர்ட் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு ஒலி ஒளி வடிவம் கொடுத்து நெறிபடுத்தினார்.